ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் ரத்தாகுமா?

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

மெல்போர்ன் : மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வர இருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.latest tamil newsஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவலாக 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மரங்களும் மூலிகை தாவரங்களும் தீயில் எரிந்து சேதமாயின. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் உட்பட 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இ்நத தீயினால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் அந்நாட்டு பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செயல்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


latest tamil newsஇதற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜன.,13 முதல் ஜன., 16 வரை இந்தியாவிற்கு பயணம் செய்ய ஸ்காட் மாரிசன் திட்டமிட்டிருந்தர். ஆனால் காட்டுத் தீ பிரச்னை குறித்த நடவடிக்கைகளால் அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S A Sarma - Hyderabad,இந்தியா
03-ஜன-202021:53:05 IST Report Abuse
S A Sarma இந்த தலைப்பை பார்த்தால், ஏதோ இந்தியாவில் தவறு நடந்ததால், ஆஸ்திரேலியா பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ததாகக் தோன்றுகிறது. உள்ளே படித்தவுடன் தான் தெரிகிறது, காட்டுத் தீ பரவலால் பயணம் ரத்து என்று. தலைப்பு தரும் போது சிறிது கவனம் தர வேண்டும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜன-202001:35:32 IST Report Abuse
Sanny @SA Sarma அவர்களே, அதுக்குதான் சொன்னாங்க, கண்ணால் காண்பது, காதால் கேட்பது, வாயால் சொல்வது எல்லாமே பொய் என்று....
Rate this:
narayan - mayotte,எரிட்ரியா
04-ஜன-202008:22:46 IST Report Abuse
narayanஅவர் அவர் நாட்டு பிரச்சனையை கவனிக்க போறார்.. அடுத்த நாட்டு பயணம் முக்கியம் இல்லை என்று நினைக்கிறார். நம்ம பிரதமர் இங்கே பிரச்னை வந்தால் உடனே பறந்து விடுவார்.. ஹி ஹி ஹி வித்தியாசம் ஒன்றே...
Rate this:
narayan - mayotte,எரிட்ரியா
04-ஜன-202008:24:19 IST Report Abuse
narayanசன்னி இது எல்லாருக்குமா அல்லது பிஜேபி செய்திகளுக்கு மட்டுமா? ஏன்னா நம்ம எதிர்க்கட்சி செய்திகள் என்றாலே என்ன ஏது என்று படிக்கலாமே வெள்ளை பச்சை மூர்க்கன் என்று புலம்ப ஆரம்பித்து விடுவோமே...
Rate this:
Cancel
MIRROR - Thamizhagam,இந்தியா
03-ஜன-202021:04:11 IST Report Abuse
MIRROR நாட்டின் மீது அக்கரை உள்ள ஆஸ்திரேலியா பிரதமர் பிரச்சினை என்கிறபோது வெளிநாட்டு பயணத்தை தவிர்ப்பது இயல்பு தானே.
Rate this:
narayan - mayotte,எரிட்ரியா
04-ஜன-202008:25:16 IST Report Abuse
narayanஅது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதே அண்ணே... நாம தான் பிரச்னை வந்தவுடன் பறந்து விடுவோமே அதான் ஹி ஹி ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X