அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெ.கண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் டுவிட்

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (141)
Share
Advertisement
சென்னை : நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சரின் 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணனுக்கு ஆதரவாக, சிதம்பரம் கருத்து தெரிவித்தது டுவிட்டர்வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய, தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை
NellaiKannan,PChidambaram,Chidambaram,tweet,நெல்லைகண்ணன்,சிதம்பரம்

சென்னை : நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சரின் 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணனுக்கு ஆதரவாக, சிதம்பரம் கருத்து தெரிவித்தது டுவிட்டர்வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய, தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏக வசனத்தில் திட்டியதுடன், 'முஸ்லிம்கள் யாராவது பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஜோலியை முடிப்பார்கள் என எண்ணினேன்' என சர்ச்சையான கருத்தை பேசினார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் நெ.கண்ணன் ஒளிந்திருந்த போது கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமின் மனுவையும், மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.


latest tamil news



இந்நிலையில் சிதம்பரம் பதிவிட்ட டுவிட்டர் பதிவு: பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் 'ஹைட் பார்க்' என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெ.கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சரின் 'ஜோலி'யை முடிக்க சொன்ன நெ.கண்ணனுக்கு ஆதரவாக, சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-202016:53:35 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  அஹஹா.. திகார்ல வச்சி செஞ்சிருக்காங்க போலருக்கு.. பாவம் கொப்புளிக்குது.. ஆத்தமாட்டாம அப்புச்சி இப்படி ட்விட்டிகிட்டு இருக்காரு.. வேறென்னெத்த செய்ய.. பியூஸ் புடுங்கீட்டாவல்ல.. அதான்
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-202016:50:43 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  இந்தாளெல்லாம் மந்திரியா இருந்தாரு மஹா கேவலமா நடந்துக்குறாப்புல ஒரு நொள்ளக்கண்ணன் பிரதமரையும் உள்துறை மந்திரியையும் ஏன் கொல்லவில்லைன்னு தூண்டிவிட்டு பேசுறான்.. அவனுக்கு இவன் வக்காலத்து.. பேசுறது தப்பில்லேங்கறாரு அப்புச்சி..
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
04-ஜன-202016:54:49 IST Report Abuse
rishi ஒரு கைதிக்குத்தன தெரியும் இன்னொரு கைதியின் மனசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X