யார் இந்த குவாசிம் சுலைமானி?

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (42) | |
Advertisement
பாக்தாத்: மேற்காசிய நாடான, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது, அமெரிக்கா - ஈரான்
Iran,America,QasemSoleimani,IranianGeneral,UnitedStates,US,அமெரிக்கா,இரான்,டிரம்ப்,சுலைமானி

பாக்தாத்: மேற்காசிய நாடான, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது, அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே, போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news
யார் இவர்?


தளபதி குவாசிம் சுலைமானி(62), ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை பிரிவில், 1970களில் தன் பணியை துவக்கினார். 1980களில் நடைபெற்ற ஈரான் - ஈராக் போர்க்களத்தில், முக்கிய பங்காற்றினார். தன் போர் தந்திரங்களால், இஸ்லாமிய புரட்சிப்படையில், மிக குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்றார். மேலும், குத்ஸ் படைப்பிரிவை உருவாக்குவதில், சுலைமானியின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள யூத இனத்தவரின் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில், இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.


latest tamil newsஈராக்கில், சதாம் உசேன் ஆட்சிக்கு பிறகு, உருவான அரசாங்கத்தில், சுலைமானிக்கு முக்கிய பங்கு உள்ளது. அமெரிக்க படைகளுக்கு எதிராக, பல கொடூர தாக்குதல்களை நடத்த, குத்ஸ் படையினருக்கு இவர் பயிற்சி அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Jayakumar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-202014:50:55 IST Report Abuse
Nagarajan Jayakumar இந்த தீவிரவாதியின் இறப்பு யூத மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
07-ஜன-202005:33:26 IST Report Abuse
oce ஈராக் இஸ்ரேல் ஒன்றுக்கொன்று அண்டை நாடுகள். அந்த இரு நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள். மத வெறுப்பில் இஸ்ரேலை தன் எதிரியாக நினைத்த ஈரான், ஈராக்கை வளைத்து போட ஈராக் மக்களுக்கு தொல்லை கொடுத்தது. இதற்கு முக்கியமான புள்ளியை ட்ரம்ப தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே போட்டு தள்ளி விட்டார். அதனால் ஈரான் ஆப்பதனை அசைத்த குரங்கு போல் தவிக்கிறது. மாஷா அல்லாஹ் உனக்கு எது சொந்தம்.
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
05-ஜன-202017:17:01 IST Report Abuse
Lawrence Ron Donald trump brilliantly diverted his impeachment issue and entire world by testing a drone on the Arab's head
Rate this:
பூபதி - திம்மநாயக்கன்பட்டி, நாமக்கல்,இந்தியா
10-ஜன-202016:19:42 IST Report Abuse
பூபதிநான் இதை ஆமோதிக்கிறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X