அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றி! அதிக வித்தியாசமின்றி அ.தி.மு.க., - தி.மு.க.,

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (41+ 199)
Advertisement

ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிக வித்தியாசமின்றி, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், மொத்த இடங்களை பங்கிட்டுள்ளன. ஆளும் கட்சி தான், உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற நிலை, இந்த தேர்தலில் மாறியுள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க., கூட்டணி, ஆளும் கூட்டணியை விட, சற்று கூடுதல் வெற்றியை பெற்றுள்ளது.


தமிழகத்தில், 27 மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துவங்கியது; நேற்று இரவு வரை தொடர்ந்தது.


மாறி மாறி முன்னிலை


ஆரம்பத்திலிருந்தே, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்றன. நேற்று மாலை நிலவரப்படி, தேர்தல் நடந்த, 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க., கூட்டணி, 240 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க., கூட்டணி, 271 இடங்களை பிடித்து முன்னேறியது. ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் நடந்த, 5,090 வார்டுகளில், அ.தி.மு.க., கூட்டணி, 2,199 இடங்களையும், தி.மு.க., கூட்டணி, 2,356 இடங்களையும் பிடித்தன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், 512 வார்டுகளை கைப்பற்றினர்.

தேர்தல் நடந்த, 27 மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி, கோவை, சேலம், தர்மபுரி, கடலுார், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், துாத்துக்குடி, அரியலுார், விருதுநகர் என, 13 மாவட்டங்களில், அதிகளவில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி களை பிடித்துள்ளது.இம்மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகள், அ.தி.மு.க.,விற்கு உறுதியாகி உள்ளன. அதேபோல, தி.மு.க., கூட்டணி, மதுரை, நீலகிரி,திண்டுக்கல், பெரம்பலுார், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி என, 13 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை, அதிகம் பிடித்துள்ளது.


இழுபறி


இம்மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகள், தி.மு.க.,கூட்டணிக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், இரு கூட்டணிக்கும் இடையில், இரவு வரை இழுபறி நீடித்தது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல், ஆளும் கட்சிக்குசாதகமாக இருக்கும். அக்கட்சியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும். ஆனால், இம்முறை ஆளும் கட்சியான, அ.தி.மு.க., கூட்டணியை விட, சற்று கூடுதலான இடங்களை, தி.மு.க., கூட்டணி பிடித்துள்ளது. அதேநேரம், இரு கட்சிகளும், தனிப்பெரும் வெற்றியை பெற தவறி விட்டதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.


கடந்த தேர்தல்களுடன் ஒப்பீடு


தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல்களில், ஆளும் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றுவது வழக்கம். மாநிலத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவரே, உள்ளாட்சியிலும் இருந்தால், திட்டப் பணிகளில் சிக்கல் வராது என்ற எண்ணமும், ஆளுங்கட்சியின் அதிகார பலமும், இதற்குகாரணமாக இருந்தன.

கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது, தேர்தல் நடந்த, 6,569 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், தி.மு.க., 2,488 இடங்களையும், அ.தி.மு.க., 1,417 இடங்களையும் கைப்பற்றின. மற்ற இடங்களில், இவற்றின் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. அதேபோல, 656 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க., 312 இடங்களையும், அ.தி.மு.க., 157 இடங்களையும் கைப்பற்றின. அடுத்து, 2011ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது, அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்தது. அந்த தேர்தலில், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், அ.தி.மு.க., 3,893 இடங்களிலும், தி.மு.க., 1,007 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மொத்தம், 655 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க., 602 இடங்களிலும், தி.மு.க., 30 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், மற்ற இடங்களில் வென்றன. இம்முறை, 27 மாவட்டங்களில், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 2,295 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில், தி.மு.க.,வும், 2,103 இடங்களில், அ.தி.மு.க.,வும் முன்னிலையில் உள்ளன.

தி.மு.க.,விற்கு, 2006 முடிவுகளுடன் ஒப்பிட்டால், தற்போது பெற்றுள்ள இடங்கள் குறைவு தான். அதேபோல்,, அ.தி.மு.க., 2011ல் பெற்ற இடங்களுடன் ஒப்பிட்டால், தற்போது, 60 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த தேர்தல் முடிவுகளில் காணப்பட்ட ஆளுங்கட்சி ஆதிக்கம், தற்போது இல்லை.

-நமது நிரூபர்

Advertisement
வாசகர் கருத்து (41+ 199)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஜன-202006:04:19 IST Report Abuse
skv srinivasankrishnaveni தமிழனுக்கு ரெண்டுதான் தெரியும் ஒன்னு திமுக இல்லே அதிமுக ரெண்டும் தன்னை ஏமாற்றும் என்றுதெரிஞ்சுதான் ஏமாந்து நிக்குறாங்க பொதுஜனம் 80%குடிகாரனாக்கிய பெருமை ரெண்டுகாட்ச்சிக்கும் இருக்கே அதனால் நேர்மை உண்மை சத்தியம் எதுவும் வேண்டாம் பாமரனுக்கு குடிக்கணும் சாக்கலே வீழ்ந்து சாவணும் பொண்டாட்டிப்பிள்ளைக்குட்டி நாசமாபோகணும் இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
04-ஜன-202021:56:33 IST Report Abuse
pazhaniappan வோட்டு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே திமுக முன்னனிலையை தொடர்ந்து கொண்டே இருந்தது, தங்கள் மாறி மாரி முன்னிலை பெற்றிருந்தது என்று கூறியிருப்பது தவறான தகவல் , மேலும் பல்வேறுமாவட்டங்களில் தவறான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் அது தெரியாமல் நடந்ததா இல்லை , நீங்கள் கூறிய பொய்யை நியாயப்படுத்தவா , உதாரணத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக 144 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் , அதிமுக 94 இடங்களையும் பெற்றிருக்கிறது (தேர்தல் கமிஷன் இணையதள செய்தி) ஆனால் நீங்கள் அதிமுக வுக்கு 119 இடங்களும் . திமுக வுக்கு 32 இடங்கள் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறீர்கள் ,மேலும் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் திமுக 47 .18 % வோட்டுக்களும் , அதிமுக 41 .5 % வோட்டுக்களும் , ஊராட்சி ஒன்றிய கவுன்சில் தேர்தலில் திமுக 41 . 2 %வோட்டுக்களும் , அதிமுக 34 .7 % வோட்டுக்களும் பெற்றிருக்கிறார்கள் ஆகா 7 % வோட்டுக்களுக்கு அதிகமாக திமுக பெற்றிருக்கிறது ,அதுவும் ஆளும் கட்சியே இடை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்ற வரலாற்று உண்மைக்கு மாறாக வும் , தேர்தலில் அதிமுக பணத்தை தாராளமாக அல்லி கொடுப்பார்கள் , திமுக சம்பாதித்த காசை கொடுக்க மனம் வராமல் கிள்ளி கொடுப்பார்கள் என்ற விமர்சனத்திற்கு ஏற்ப பணத்தை தாராளமாக செலவு செய்தும் ,தனது ஆட்சி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதற்க்காக இரண்டு பிரிவுகளாக , அதாவது ஊரக உள்ளாட்சி , மற்றும் நகராட்சி , மாநகராட்சி என்று பிரித்து அதையும் இரண்டு கட்டங்களாக நடத்தி எல்லாவிதமான அடாவடியும் செய்து உதாரணத்திற்கு ஏதாவது சுயேச்சை வெற்றிபெற்றிருந்தால் அதை அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு பின் வெற்றிபெற்ற சுயேட்சைக்கு பணத்தை கொடுத்து சரிக்கட்டுவது என்று எண்ணற்ற முறை கேடுகள் அத்தனையையும் கடந்து பெற்றிருக்கக்கூடிய வெற்றியை சமமாக பெற்றிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டிருப்பது உண்மையல்ல
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
04-ஜன-202021:42:57 IST Report Abuse
Suri குமரியில் மட்டும் வாகு பதிவு இயந்திரம் உபயோகப்படுத்தப்பட்டது.. அங்கு மட்டும் பீ ஜெ பீ கொஞ்சம் கூடுதலாக வெற்றி பதிவு செய்துள்ளதை சற்றே கூர்ந்து பார்க்கவேண்டும் .....EVM உடன் பீ ஜெ பீ யை இணைத்தால் அது எப்படி வேலை செய்யும் என்று நன்றாக அலச வேண்டும்.... அது மட்டும் இல்லாமல்.....அடிமை அண்ணா தி மு க... வாக்கு வாங்கியே இல்லாத பீ ஜெ பீ க்கு மற்ற கூட்டணி கட்சிகளை விட அதிக இடங்களை ஒதிக்கியதன் மர்மம் ஏன்னா??? மற்ற காட்சிகள் வாய் மூடி மௌனியாக இதற்க்கு ஒப்புக்கொண்டதன் அர்த்தம் என்ன?? அனைவரும் விலை போய் விட்டார்கள் என்பது .. இல்லை யாருக்கும் இதை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாத வெத்து காகித புலிகளாக மாறிப்போனதாக தான் எடுத்துக்கொள்ளவேண்டும்....மொத்தத்தில் கொள்கைகைகளை முன் வைத்து கட்சியை வளர்க்க துப்பு கெட்ட பீ ஜெ பீ .. மிரட்டி ரௌடி போல நடந்துகொண்டு.. அடிமையின் அடி மடியில் கை வைத்து உள்ளது... அடிமையையும் அழித்து... தன் கட்சியை கூட இஞ்சு இஞ்சாக வளர்க்க .. பீ ஜெ பீ யால் மட்டுமே முடியும்.. அந்த கேவலமான சாமர்த்தியத்தை மெச்சவேண்டுமா இல்லை பார்த்து காரி உமிழ வேண்டுமா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X