காங்., விமர்சனம் சிவசேனா பாய்ச்சல்

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (89)
Share
Advertisement
காங்., விமர்சனம்  சிவசேனா பாய்ச்சல்

இந்த செய்தியை கேட்க

மும்பை: ஹிந்து மகா சபையின் முக்கிய தலைவரான, மறைந்த வீர சாவர்க்கரை அவதுாறாக கூறிய காங்., கட்சியினரை, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, கடுமையாக விமர்சித்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஹிந்து மகா சபையின் முக்கிய தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான, மறைந்த வீர சாவர்க்கரை பற்றி, காங்கிரஸ் கட்சியினர், சமீபத்தில், ஒரு கையேட்டை வெளியிட்டிருந்தனர். அதில், சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். அதில், அந்தமான் சிறையிலிருந்து சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்ட பின், பிரிட்டிஷ் அரசாங்கம், அவருக்கு பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.


latest tamil news



இதற்கு, காங்கிரசின் கூட்டணி கட்சியான சிவசேனா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கூறியதாவது:சாவர்க்கர் மிகப் பெரிய மனிதர். அவரது புகழ், இன்றும் நிலைத்து நிற்கிறது. ஆனால், ஒரு தரப்பினர், அவரை தொடர்ந்து விமர்சிக்கின்றனர்; இது, அவர்களது மனதில் அழுக்கு படிந்துள்ளது என்பதை காட்டுகிறது. அந்த அழுக்கை, அவர்கள் நீக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். மஹாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவர் சந்திர காந்த் பாட்டீல் கூறுகையில், ''வீர சாவர்க்கரை பற்றி தவறாக குறிப்பிட்டதற்காக, காங்கிரஸ் கட்சி யினர் மன்னிப்பு கோர வேண்டும்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
04-ஜன-202023:34:05 IST Report Abuse
natarajan s வீர் சாவர்க்கர் போன்ற எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்து காந்தி, நேரு இவர்களை தவிர வேறு எவரையும் நமது வரலாற்றில் முன்னிலைப்படுத்தாமல் ஒரு சுதந்திர போராட்ட வரலாறு இன்றுவரை தெற்கில் ஒரு ஆவணப்படுத்தப்பட்ட தென்னிந்திய வரலாறு கிடையாது கிடையாது, அந்தந்த ஆட்ச்சியாளர்கள் அவர்களை முன்னிலைப்படுத்த ஒரு வரலாறை கட்டவிழ்த்துவிட்டு அதுதான் உண்மை என்றே இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம் கடந்த மாதம் 17 ம் நாள் நான் இதைத்தான் நான் பதிவிட்டு இருந்தேன்
Rate this:
Cancel
sugumaran - chennai,இந்தியா
04-ஜன-202020:55:26 IST Report Abuse
sugumaran வீர் சாவர்க்கர் அந்தமான் சிறைச்சாலையில் இந்த நாட்டுக்காக பட்ட துன்பத்தையும் துயரத்தையும் தெரிந்து கொள்ள காலபாணி (மலையாளம்) அல்லது சிறைச்சாலை(தமிழ்) படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.இந்த கதாபாத்திரம் அணு கபூர் நடிப்பில் அசத்தியிருப்பார்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-ஜன-202020:12:05 IST Report Abuse
Sampath Kumar இந்த நேரு யாரு ? எந்த ஜாதி ? இந்த ஊரு ? கொஞ்சம் யோசித்து பதில் சொல் ? எல்லாம் இந்த ஏழாவெடுத்த உயர் சாதி சேர்ந்தவர் தானே அய்யா இவர்களால்தானே ஏன் தேசம் இருளில் கிடடக்குது யார் எதை பத்தி பேசுவது ? யார் எதை எதிர்ப்பது ??/ அன்று விதைத்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X