பொது செய்தி

தமிழ்நாடு

டில்லி தாக்குதலில் சுலைமானிக்கு பங்கு: டிரம்ப்

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
லாஸ் ஏஞ்சல்ஸ்: டில்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி கசிம் சுலைமானிக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, 62,
Terror Plot, Delhi, Trump, Iran_General, Kill, US_Strike, லண்டன், டில்லி, ஈரான், தளபதி, காசிம் சுலைமான், அமெரிக்கா, அதிபர், டிரம்ப், டொனால்ட் டிரம்ப், பயங்கரவாத

இந்த செய்தியை கேட்க

லாஸ் ஏஞ்சல்ஸ்: டில்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி கசிம் சுலைமானிக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, 62, மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற, ஈராக்கைச் சேர்ந்த ஹஷீத் அல்ஷாபி கிளர்ச்சியாளர் குழுவின் துணை தளபதி அபு மஹ்தி அல் முஹந்தி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவுப்படி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது, அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே, போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இது தொடர்பாக புளோரிடோவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : ஈராக்கில், அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர் காயமடைய காரணமான தாக்குதல், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதல்கள், சுலைமானின் உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது. டில்லி முதல் லண்டன் வரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் அவருக்கு பங்கு உள்ளது. அவரது பிடிவாதமான கொள்கைகளால், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். சுலைமானியின் அட்டூழியங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை இன்று நாம் நினைவில் வைக்கிறோம். அவருடைய பயங்கரவாத ஆட்சி முடிந்துவிட்டதை அறிந்து ஆறுதல் பெறுகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக, மத்திய கிழக்கு நாடுகளை சீர்குலைக்கும் வகையில், கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களை தூண்டி வந்தார்.

நேற்று அமெரிக்கா செய்ததை நீண்ட நாட்களுக்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஈரானில் போராட்டம் நடத்திய அப்பாவிகளை, தொந்தரவு செய்து கொல்லப்பட்டதன் பின்னணியில் சுலைமானி உள்ளார். போரை நிறுத்துவதற்காக தான் அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. போரை துவக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரான் மக்கள் மீது மரியாதை வைத்துள்ளேன். ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அண்டை நாடுகள் சீர்குலைக்க ஈரான் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஜன-202021:46:27 IST Report Abuse
Narayan உண்மை. சோலைமணி தலைமை வகித்த குட்ஸ் படை ஆபரேஷன் வட்டத்தில் சிரியா, லெபனான், இந்தியா உட்பட சில நாடுகள் இருப்பது உண்மையே. இவர்களே டில்லி இஸ்ரேலை தூதரக வெடிப்பில் ஈடுபட்டனர். கூடுதல் தகவல், அப்போதைய உள்துறை மந்திரி பசிதம்பரம் இந்த கேசில் மூர்க்கம் உள்ளதால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கேஸை சைலண்டா மூடி விட்டார்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
04-ஜன-202021:20:16 IST Report Abuse
Rajas 50 பில்லியன் பேரல் ஆயில் கிணறு ஒன்று இருப்பதை ஈரான் இரண்டு மாதங்களுக்கு முன் கண்டு பிடித்தது. அதிலிருந்து அமெரிக்காவின் சகுனி ஆட்டம் அங்கே தொடங்கி விட்டது.
Rate this:
Cancel
jainhospitalcare - channei,இந்தியா
04-ஜன-202021:15:14 IST Report Abuse
jainhospitalcare முட்டையின் நன்கொடைக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X