பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை, புதுக்கோட்டையில் வட மாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (156)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் வடமாநிலத்தவர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு இன்று அதிகாலை திடீரென பூட்டு போட்டு அங்கு சில எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை தமிழ் தேசிய கட்சியினர் ஒட்டி சென்றுள்ளனர். புதுக்கோட்டையிலும் வட மாநிலத்தவரின் 3 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.



latest tamil news




புதுக்கோட்டை மேலராஜவீதியில் உள்ள வடமாநிலத்தவரின் 5 கடைகளுக்கு, தமிழ் தேசிய கட்சியினர் பூட்டுபோட்டனர். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் வந்து வேலை செய்வதால், டெல்டா மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் பறி போகின்றன. வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து பேன்சி பொருட்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், கட்டடங்களுக்கு தேவையான டைல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது, இனிப்பகங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதனால் உள்ளூரில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.


latest tamil news



இந்நிலையில் தமிழ் தேசிய கட்சி சார்பில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்கு வரக் கூடாது எனவும், இங்கு வருபவர்கள் திரும்பிச் செல்லுங்கள் எனவும், அவர்கள் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு இன்று பூட்டு போடும் போராட்டத்தை நடத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


latest tamil news



தஞ்சாவூரில் இனிப்பகம், ஓட்டல்கள், மார்பிள் கடைகள் என ஐந்து கடைகளுக்கு நேற்று( நள்ளிரவு திடீரென தமிழ் தேசிய கட்சியினர் பூட்டுகளை போட்டு பூட்டியும் அந்த இடத்தில் துண்டுப்பிரசுரங்களை ஒட்டி தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.இதைத்தொடர்ந்து இன்று(ஜன.,4) காலை வியாபார நிறுவனங்களுக்கு வந்த ஊழியர்களும் உரிமையாளர்களும் கூடுதலாக அங்கு ஒரு பூட்டு போடப்பட்டு இருந்தது கண்டு அங்கு ஒட்டப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


புதுக்கோட்டை டவுன் மேல ராஜவீதியில் வடமாநிலத்தவர்கள், எலக்ட்ரிகல்ஸ் கடைகள் வைத்துள்ளனர். இக்கடைகளை தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் கடைகளுக்கு பூட்டு போட்டு உள்ளனர். தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் அருகே போட்டுச் சென்றுள்ளனர். 3 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
11-ஜன-202002:35:16 IST Report Abuse
Aarkay அரபி கைக்கூலிகள் வேலையாகவே இருக்கும் டிராவல் ஏஜென்சி என்ற பெயரில் இவர்கள் நடத்தும் ஆட்கடத்தல், ஹவாலா தொழில்களைவிட, மலிவு விலையில் எலக்ட்ரிகல் மற்றும் இதர பொருட்கள் விற்கும் வடமாநிலத்தோர் எவ்வளவோ மேல்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
08-ஜன-202015:04:33 IST Report Abuse
ganapati sb அப்போது வெள்ளைக்காரன் வியாபாரம் செய்ய வரும்போதே அதிகாரத்தில் இருந்தவர்கள் திருப்பி அனுப்பி இருந்தால் இப்போது நாங்கள் தமிழர்கள் என அரேபிய ஐரோப்பிய அடிமைகள் பேச முடிந்திருக்காது
Rate this:
Share this comment
Cancel
??????? - Thiruvaiyaru,இந்தியா
08-ஜன-202008:21:30 IST Report Abuse
??????? Real NRC
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X