போராடுவதில் பெருமை: சிதம்பரம் கருத்து

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (78)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட மாட்டோம். போராடுவதில் பெருமைப்படுகிறோம் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.







ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், என்பிஆர் என்பது என்ஆர்சி.,யுடன் தெளிவாக தொடர்புடையது. என்பிஆர்.,ஐ மட்டும் தான் கொண்டு வருவோம், என்ஆர்சி.,ஐ கொண்டு வர மாட்டோம் என ஏன் உள்துறை அமைச்சகம் சொல்ல மறுக்கிறது?
நாங்கள் என்பிஆர் மட்டுமே கொண்டு வர முயற்சித்தோம். அதை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கொண்டு வருவதை நிறுத்தினோம். 2010 ல் நாங்கள் என்பிஆர்., கொண்டு வந்த போது அசாமில் என்ஆர்சி., இல்லை. 19 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மாநிலத்தில் இல்லாதவர்களாக நாங்கள் செய்யவில்லை.





குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெற மாட்டோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஏன் எங்களை போராட்டக்காரர்கள் என்கிறார்கள்? நாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்துகிறோம். எங்கள் கருத்து சரி என நினைப்பதால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது? இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
05-ஜன-202011:32:44 IST Report Abuse
Sampath Kumar அவர் தொடர்பு வாதத்தை அவர் வைக்கிறார் எதிர்ப்பவர்கள் அதுக்கு பதில் சொல்லுங்கள் அதை விட்டு தனி மனித விமர்சனம் வேண்டாமே
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
05-ஜன-202011:05:59 IST Report Abuse
sri போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி ஒரு புரிதலும் கிடையாது. ஆறு ஆண்டு காலமாக பாஜக விற்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ய முடியாமலிருந்த காங்கிரஸ், முஸ்லிம்களை கிளப்பிவிட்டு, தேவையில்லாத வன்முறை போராட்டத்தில் ஈடுபடுகின்றது. எதிர் கட்சிகள் ஆட்சி செய்யும் மாகாணங்களில் வன்முறை யில்லை, பா ஜ க ஆளும் மாகாணங்களில் மட்டும் வன்முறை- பார்க்கும்போது, எதிர்க்கட்சிகளின் சிந்தனை தெளிவாக புரிகிறது. இந்த குடியுரிமை சட்ட திருத்த சட்டம், இந்திய குடிமக்களை எந்த விதத்தில் பாதிக்கிறது என்று விளக்கமாக இதுவரை ப சி எழுதியதுமில்லை சட்டம் ராஜ்ய சபாவில் விவாதித்தபோது, இந்த சட்டம் இந்திய சட்ட திட்டத்திற்கு புறம்பானது என்று பொத்தாம்பொதுவாக பேசியதை தவிர வேறொன்றும் செய்யவுமில்லை. வீணாக புரளி கிளப்பி, குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
05-ஜன-202011:01:32 IST Report Abuse
sripa பாஸீ முதல உங்க தலைமேல் இருக்குற பிரச்சனையை பாருங்கள். உங்களுக்கு இதுபோல கருது கூறுவதற்கு எந்த ஓர் அருகதையும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X