இதை செய்தால் அரசின் முடிவு மாறலாம் ; பினராயி விஜயன்

Updated : ஜன 04, 2020 | Added : ஜன 04, 2020 | கருத்துகள் (45)
Advertisement

திருவனந்தபுரம் : குடியுரிமை மசோதவிற்கு எதிரான தீர்மானத்தை மற்ற மாநிலங்களும் நிறைவேற்றினால் மத்திய அரசின் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.






குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, டிச., 31 ல் கேரள சட்டசபையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒன்றிணையுமாறு ஜார்கண்ட், மேற்கு வங்காளம், டில்லி, மஹாராஷ்டிரா, பீஹார், ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நேற்று (ஜன.,3) கடிதம் எழுதியுள்ளார்.





அந்த கடிதத்தில், குடியுரிமை சட்டத்தால் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து இந்தியர்களிடையேயும் ஒற்றுமையே என்பது தேவை. வேற்றுமையில் ஒற்றுமை தான் நாட்டின் அடிப்படை தத்துவம். அனைத்து கருத்து வேறுபாடுகளையும் களைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக இணைய வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேட்டை குறித்துதான் தற்போது கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை தேசிய குடியுரிமை பதிவேட்டிற்காக பயன்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. எனவே தான் கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். இதனை போல் மற்ற மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்றினால் மத்திய அரசின் கவனத்திற்கு செல்லும். அரசின் முடிவுகளில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.





இது தொடர்பாக மேற்கு வங்கம், சிலிகுரியில் நடந்த பேரணியில் மம்தா பேசுகையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும். "நான் குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுகிறேன், என்னுடன் கைகோருங்கள். எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற அனைத்து மக்களும் முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால், கேரளாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும் எதற்கு அதை பிரச்னையாக்குகின்றனர்,'' என, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிவாசகம் - உறையூர்,இந்தியா
05-ஜன-202015:59:58 IST Report Abuse
மணிவாசகம் வெறும் 31,000 பேருக்கு, அதுவும் ஒரு முறை மட்டும், அண்டை நாட்டின் மதரீதியான துன்புறுத்தல்களினால் அடைக்கலம் பெற்று வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கே இவ்வளவு கொதிக்கறீங்களே, இந்திய தேசத்தின் நலனல்லாது மதத்தின் பெயரால் மட்டுமே ஒன்றுபட்டு நிற்பவர்கள், பெருமளவில் இன்று அமைதியைக் குலைப்பவர்கள் லட்சக்கணக்குல நம்ம நாட்டுல அனுமதி இல்லாம பூந்துக்கிட்டு, நம்ம நாட்டு வளங்களையும், நமக்கு நியாயமாய்க் கிடைக்கவேண்டிய வேலைகள், சலுகைகள் எல்லாவற்றையும் நமது உழைப்பில் இருந்து திருடித் தின்பவர்களை அப்பொழுது எவ்வளவு தூரம் அடையாளம் கண்டு இங்கிருந்து உடனடியாகச் கிளம்பச் செய்யவேண்டும்? ஆனால், இந்தச் சட்டம் யாரையும் வெளியேற்றும் சட்டம் பற்றியதல்ல. இது புரியாதவர்களல்ல அந்த 11 மாநில முதல்வர்களும். இரு பாராளுமன்ற அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்க்கும் இவர்களால், இன்று 'சிறுபான்மையினர்' என்று கூறப்படும் வாக்கு வங்கி அரசியலுக்காக கொல்லைப்புறமாக நடத்தப்படும் இம்மாதிரி அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமளித்தோமானால், நாளைய பாரத சமுதாயம் நம்மைக் காறி துப்பும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஜன-202013:10:36 IST Report Abuse
Natarajan Ramanathan அடுத்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தால் பினராய்க்கு புத்திவரலாம்.
Rate this:
Share this comment
Cancel
05-ஜன-202012:17:57 IST Report Abuse
நக்கல் இந்திய தேசத்துக்கு விரோதமாகவே சிந்திக்கவும் செயல்படவும் உருவாக்கப்பட்டதே கம்யூனிஸ்ட் மற்றும் தீக, தீயமுக கட்சிகள்.. இவர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள்.. இன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடி வெறுப்பில் கம்யூனிஸ்ட் பாணியை பின்பற்றுகின்றனர்... கம்யூனிஸ்டுகள், தீக, தீயமுக ஒழிந்தால் நாடு வேகமாக முன்னேறும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X