பொது செய்தி

தமிழ்நாடு

'திருமணத்திற்கு அன்பளிப்பு வேண்டாம் குளம் சீரமைக்க நன்கொடை தாருங்கள்'

Added : ஜன 04, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 'திருமணத்திற்கு அன்பளிப்பு வேண்டாம் குளம் சீரமைக்க நன்கொடை தாருங்கள்'

கோவை: கோவையில், கண் டாக்டர் ஒருவர், தன் மகள் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களை, அன்பளிப்பை மறுத்து, குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நன்கொடை வழங்கச் செய்தார்.

கோவையில், நீர்நிலை பாதுகாப்பில், ஏராளமான தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், வெள்ளலுார் குளத்தை துார்வாரி சீரமைத்து, கரையில் குறுங்காடு வளர்த்து வருகின்றனர். அரங்கு அமைப்புஇதையறிந்த, கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த, கண் டாக்டர் ரவிச்சந்திரன், தன் மகள் அக் ஷயாவின் திருமண அழைப்பிதழில், 'அன்பளிப்பு வழங்க வேண்டாம்; அதற்கு பதிலாக, நீர் நிலைகளை சீரமைத்து வரும், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு நன்கொடையாக வழங்குங்கள்' என, அச்சிட்டு இருந்தார்.சமீபத்தில் நடந்த திருமணத்தின்போது, மண்டபத்தில், அந்த அமைப்பினருக்கு, அரங்கு அமைத்துக் கொடுத்தார்.

அறிவுறுத்தல்

உறவினர்கள் நன்கொடை வழங்கி, ரசீது பெற்றுக் கொண்டனர். நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு, மரக்கன்று வழங்கினர். மொத்தம், 1.25 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது.புதுமண தம்பதியான, தேஜஸ்வி - அக் ஷயா ஆகியோர், வெள்ளலுார் குளக்கரையில் மரக்கன்று நட்டனர்.

டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''என் மகள், அமெரிக்காவில், விஞ்ஞானியாக பணிபுரிகிறாள். அவளது விருப்பப்படி, அன்பளிப்பு பெறாமல், குளங்களை பாதுகாக்கும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்க அறிவுறுத்தினோம்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-ஜன-202015:03:25 IST Report Abuse
Loganathan Kuttuva கோவையில் இந்த நலப்பணிகள் சிறப்பாக நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-202001:27:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சீரும் சிறப்புடனும் வாழ்வாங்கு வாழுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஜன-202001:26:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொதுப்பிணி துறையிடம் மட்டும் கொடுத்து விடாதீர்கள். லஞ்ச நாய்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X