மோடி- அமித் ஷா கருத்து வேறுபாடு?

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (61)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக அலசப்படும் ஒரு விஷயம்-, 'மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இடையே உறவு சரியில்லையாமே...' என்பது தான். குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், தொடரும் போராட்டங்களும், இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் அணுகவில்லை எனவும், இதனால் தான், மோடி - அமித் ஷா இடையே புகைச்சல் எனவும், அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.






குடியுரிமை திருத்த சட்டம், முழுக்க முழுக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் கையாளப்பட்டது. பார்லிமென்டில் நடந்த விவாதத்திலும், மீடியாக்களுக்கும், இந்த விவகாரத்தில் அமித் ஷா தான் பதில் அளித்தார். விவாதத்தில் பங்கேற்று பதில் சொன்னார்.'எனவே, இந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டால், மொத்த பழியும் அமித் ஷா மீது தான் விழுமே தவிர, மோடி மீதல்ல' என, ஒரு சீனியர், பா.ஜ., தலைவர் கூறினார்.ஆனால், இந்த சீனியர் தலைவரின் கருத்தை, மற்ற தலைவர்கள் மறுக்கின்றனர்.

மோடியும், அமித் ஷாவும் எந்த அளவிற்கு நெருக்கம் என்பது, அவர்களோடு அதிகமாக பழகியவர்களுக்குத் தான் தெரியும். மேலும், இந்த சட்டம் குறித்து, பிரதமர் மோடி அடிக்கடி விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு, எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க, பல திட்டங்களை தயாரித்து கொடுத்ததே பிரதமர் தான் என்கின்றனர், அமித் ஷாவிற்கு நெருக்கமானவர்கள்.காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும், பல போராட்டங்கள் வெடித்தன.





ஆனால், இப்போது அனைத்தும் அமைதியாகிவிட்டது. அதே போல, குடியுரிமை சட்ட விவகாரத்திலும், விரைவில் அமைதி ஏற்படும் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். 'மோடி- - அமித் ஷா உறவு சரியில்லை' என, எதிர்க்கட்சியினர் கிளப்பி விட்டதை, மீடியாவும் சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும்; ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றனர், இவர்கள்

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
06-ஜன-202011:11:34 IST Report Abuse
Tamilachi மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது...மோடி மனதில் நினைப்பதை அமித்ஷா செய்வார்...அது எக்காலத்திலும் மாறாது...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
05-ஜன-202023:03:14 IST Report Abuse
Aarkay இது உருப்படாத மெகா கூட்டணி (Mahaaaaa Gatbandan) தலைவர்கள் கிள்ளி போட்டதாய் இருக்கும். முதலில், ராஜஸ்தானும், மஹாராஷ்டிரமும் கையை விட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஜன-202018:20:04 IST Report Abuse
Endrum Indian காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டம் செய்தது இப்போ ஆதரவு போராட்டம் ஆரம்பித்து விட்டது பி ஜெ பி இடமிருந்து. காங்கிரசால் ஒரு மண்ணும் முடியாது என்று முஸ்லிம்களுக்கு வெட்ட வெளிச்சமாக்க தெரிந்தால் நிலைமை மோசமாகி விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X