பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியாவுக்கு மூடு விழாவா?: மறுக்கிறார் சி.எம்.டி.

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (14)
Advertisement
ஏர் இந்தியாவுக்கு மூடு விழாவா?: மறுக்கிறார் சி.எம்.டி.

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, ஏர் இந்தியா நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விரைவில் மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அஸ்வினி லோகானி கூறியது, ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம், அந்நிறுவனத்தினை மூடுவதற்கான திட்டம் எதுவுமில்லை.
அடிப்படை ஆதாரமில்லாமல் வதந்தியை பரப்பி வருகின்றனர். ஏர் இந்தியா தொடர்ந்து செயல்படும். பயணிகள், கார்ப்பரேட்டுகள் அல்லது முகவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. .கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசு தலையிடக்கோரி கடந்த மாதம் மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
08-ஜன-202014:47:10 IST Report Abuse
Dr Kannan பத்திரகிரியார். மெய்ஞானப் புலம்பல்: ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா, காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்? (106) மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை நிர்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம் (107).
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05-ஜன-202016:33:08 IST Report Abuse
Vijay D Ratnam கமிஷன், அரசியல்வியாதிகள் ரெண்டு கும்பலும் சேர்ந்து திவால் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள், ஏர் இந்தியாவை வெற்றிகரமாக நடத்துவது ஒரு பெரிய விஷயமே அல்ல. 130 கோடி மக்கட்தொகை கொண்ட இந்தியாவில் 2020 முதல் 2030 வரையிலான விமான பயணிகள் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் மயமாக்குவது சாலச்சிறந்தது. அரசு அதிகாரிகள் விமான டிக்கட்டுக்காக செலுத்தவேண்டிய கடன்பாக்கியே பலநூறு கோடி ரூபாய் இருக்கிறது. அமெரிக்காவில் இருப்பது போன்று ஏர் இந்தியாவை நான்கு தனித்தனி கம்பெனிகளாக பிரிக்கலாம். டெல்லியை, மும்பையை, சென்னையை, கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படவேண்டும். குறிப்பாக டிரான்சிட் நேரம், அதிகபட்சம் ஒன்றரை மணிநேரமாக இருக்கவேண்டும். நியுயார்க்கிலிருந்து சிக்காகோவிலிருந்து, லண்டன், பாரிஸ், ஃபிராங்கபர்ட்டிலிருந்து ஒரு பயணி சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடலாய்ட் போகவேண்டும் என்றால் அவர்களின் முதல் சாய்ஸ் ஏர் இந்தியாவாக இருக்கவேண்டும். உலகின் டாப் 5 விமான நிறுவனங்களுக்கு போட்டிபோடும் நிறுவனமாக ஏர் இந்தியாவை கொண்டுவருவது கஷ்டமான விஷயமே அல்ல. வெளிநாடுகளில் ஏர் இந்தியாவுக்கு பெரிய விளம்பரமே செய்யப்படுவது இல்லை. உலகின் டாப் மோஸ்ட் CEO க்களான ஜெனரல் மோட்டார்ஸ் Mary Barra மாதிரி, அமேசான் நிறுவன Jeffrey Bezos மாதிரி அப்லைட் மெட்டிரியல்ஸ் Gary Dickerson மாதிரி, ஜெ.பி மோர்கன் சேஸ் Jamie Dimon மாதிரியானவர்களிடம் தலைமை பதவியை கொடுத்தால் ஏர் இந்தியா உலகின் நம்பர் ஒன் கம்பெனியாக கொண்டு வருவது கஷ்டமான காரியமே அல்ல. சரி அத விடுங்க, மொதல்ல இந்த இன்டர்நேஷனல் ஃபிளைட்ல நாற்பது வயதுக்கு மேல பயமுறுத்துற மாதிரி ஃபுல் மேக்கப்பில் குண்டு குண்டாக டிக்கியை ஆட்டிக்கிட்டு திரியும் ஆன்ட்டிஸ்களையாவது மாற்றி தொலைக்கணும். ஸ்மார்ட்டா க்யூட்டா ஏர்ஹோஸ்டஸை போடுங்கப்பா. இதுக்கும் கோட்டா எதுவும் இருக்கோ.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜன-202019:00:21 IST Report Abuse
dandyமுதலில் air hostess பாட்டிகளை அகற்ற வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
05-ஜன-202015:35:48 IST Report Abuse
Narayan 100 % முழுசுமா வித்தரனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X