எல்லா திசைகளிலும் பரவியுள்ள வாரிசு அரசியல்

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (53)
Advertisement
எல்லா திசைகளிலும் பரவியுள்ள வாரிசு அரசியல்

இந்த செய்தியை கேட்க

கருணாநிதி - ஸ்டாலின் ; ராமதாஸ் - அன்புமணி; இந்திரா - ராஜிவ் - ராகுல்; சரத் பவார் - சுப்ரியா சூலே; உத்தவ் தாக்கரே - ஆதித்ய தாக்கரே... இப்படி வாரிசு அரசியல் வடக்கு, தெற்கு என, எல்லா திசைகளிலும் பரவியுள்ளது.மஹாராஷ்டிராவில் இந்த வாரிசு அரசியல் சற்று அதிகமாகவே உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இங்கு முதல்வராக உள்ளார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற சிவசேனா, இப்போது, காங்., - தேசியவாத காங்., ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது.

சமீபத்தில் இங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 அமைச்சர்களில், 17 பேர் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். காங்கிரசின், 12 அமைச்சர்களில், எட்டு பேர் அரசியல் வாரிசுகள். அதேபோல, சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் துணை முதல்வர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவும் அமைச்சர்.இப்படியிருக்க வாரிசு அரசியலை எதிர்த்து யார் பேச முடியும்?


Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
06-ஜன-202012:53:56 IST Report Abuse
Raja நம்ம தேநீர் வாரிசு இந்த லிஸ்டில் இடம் பெறல. ஏன்.
Rate this:
Share this comment
Cancel
ramesh - chennai,இந்தியா
06-ஜன-202009:52:49 IST Report Abuse
ramesh வாரிசு லிஸ்டில் ops மகன் ஜெயக்குமார் மகன் எல்லோரையும் வசதியாக விட்டு விட்டீர்களே
Rate this:
Share this comment
Cancel
M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா
06-ஜன-202007:44:57 IST Report Abuse
M.AYYANAR நம் நாட்டின் சாபக்கேடே இந்த வாரிசு அரசியல்தான் .எதற்கு வாரிசுகளை கொண்டு வருகிறார்கள் என்றால் ,ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தை கட்சியின் அறக்கட்டளை என்ற பெயரில் வைத்து கொள்கிறார்கள் .அந்த அறக்கட்டளைக்கு தன் குடும்பத்தை சார்ந்தவர்களையே நிர்வாகிகளாகவும் உறுப்பினர்களாகவும் நியமித்து கொள்கிறார்கள் .அந்த அறக்கட்டளையின் பெயரில் பலவிதமான சொத்துக்களை வாங்கி தங்கள் சொத்துக்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.எதிர்காலத்தில் தனக்கு பிறகு தன் வாரிசுகள் தலைமை பீடத்திற்கு வரும்பொழுது அந்த சொத்துக்களுக்கு பாதுகாவலனாகி விடுகிறார்கள்.இப்படி அடுத்தடுத்து குடும்பத்தில் ஒருவர் வந்து கட்சி என்ற போர்வையில் கட்சி சொத்துக்களை குடும்ப சொத்தாக பாது காக்க வேண்டி உள்ளதால் வாரிசுகளை இறக்கி விடுகிறார்கள்.காங்கிரஸ்தான் எல்லாவற்றிர்க்கும் தலைமை வழிகாட்டி.இவர்களுக்கு இதை தவிர வேறு வழி கிடையாது.தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம் கட்டுமரம் குடும்பம் ஆலமரம் போல் பறந்து விரிந்து கிடக்கிறது.அவர்கள் செய்யாத பிசினஸே கிடையாது.ஒருவேளை தப்பித்தவறி ஆட்சிக்கு வந்து விட்டால் இது எல்லாம்நடக்கும்,,முதலில் எங்கெங்கு கேபிள் வயர் போகிறதோ அதை முதலில் கட் பண்ணுவார்கள்,சினிமாத்துறையை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள் ,மாவட்ட செயலாளர்கள் மீண்டும் குறு நில மன்னர்கள்போல் செயல்பட்டு அப்பாவி மக்களின் நிலங்களை அபகரிப்பார்கள்.சுடலையின் புத்திரனின் இளைஞர் படைகள் என்னென்ன அட்டூழியங்களை செய்ய காத்திருக்கிறதோ ?நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது.இவர்கள் மட்டும் பதவிக்கு வராமல் வேறு யாரேனும் வந்தால் பரவாயில்லை .ஆண்டவன்தான் கருணை செய்யணும் .இப்பொழுதே கட்டுமரம் குடும்பத்தில் ,கனி ,உதயநிதி,சபரீசன்,செல்வி,தயாநிதி,கலாநிதி,முரசொலிசெல்வம்,இன்னும் கணக்கில் வராத முதலைமைச்சர்கள் உள்ளனர்,இது போக மாவட்ட குறுநில முதல்வர்கள் வேறு,..எப்படி நாடு தாங்க போகிறதோ?
Rate this:
Share this comment
ramesh - chennai,இந்தியா
06-ஜன-202012:37:43 IST Report Abuse
rameshஅய்யனார் அவர்களே மற்றவர்களாவது தங்கள் குடும்பத்தினரை வாரிசாக வைத்திருந்தனர் .ஆனால் உங்கள் தலைவியோ உடன் பிறவாத சகோதரியையும் அவற்றின் குடும்பத்தாரையும் தமிழ் நாட்டையே கொள்ளையடிக்க கூடவே வைத்திருந்தாரே அப்போது உங்கள் மனம் பதைபதைக்க வில்லையா .அப்போது உங்கள் நெஞ்சு எங்கே காற்று வாங்க போயிருந்தது...
Rate this:
Share this comment
M.AYYANAR - METTUR DAM SALEM,இந்தியா
07-ஜன-202017:51:55 IST Report Abuse
M.AYYANARஅதற்கு உண்டான தண்டனையை சசி அனுபவிக்கிறார் உமது கண்ணுக்கு தெரிய வில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறீரா? நண்பர் ரமேஷ் ....அதேபோல் தண்டனையை கட்டுமரம் குடும்பம் மற்றும் அவரது வாரிசுகள் தண்டனையை ஏற்க தயாரா என்பதை கேட்டு சொல்லுங்கள் ,...அதனால்தான் மனம் பதைபதைக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X