அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பாஜ., தலைவராக குப்புராமு?

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (113)
Share
Advertisement
Tamilnadu, BJP_Leader, D_Kuppuramu, Ramanathapuram, தமிழகம், பாஜக, தலைவர், குப்புராமு, ராமநாதபுரம்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழக பாஜ., புதிய தலைவராக, ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜ., தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மாநில பாஜ., தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த தலைவர் தேர்வு செய்வது குறித்து மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம், மேலிட பார்வையாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தி.நகர் கமலாலயத்தில் நடந்தது. இதில், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பெறப்படும் கருத்துகளை ஜெயபிரகாஷ், கட்சி மேலிடத்திற்கு அறிக்கையாக அளிப்பார். பின்னர், மேலிடத்தின் உத்தரவின் பேரில், புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.


latest tamil news



இந்நிலையில், தமிழக பாஜ., தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், 1986 முதல் 2006ம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். மேலும், பாஜ., துணைத் தலைவராகவும், பின்னர் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
11-ஜன-202011:08:56 IST Report Abuse
hasan யார் வந்தாலும் தமிழிசை அக்கா இடத்தை நிரப்ப முடியாது , ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜன-202021:34:40 IST Report Abuse
Sampath Kumar ஒரு வலய குலுக்கி குலுக்கி போட்டு எடுத்து விட்டர்கள் போல ?? வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
07-ஜன-202017:20:42 IST Report Abuse
Vmmoorthy Moorthy பார்த்தாலே பாவமா இருக்கு
Rate this:
Share this comment
G.Sivasubframanian - karur,இந்தியா
11-ஜன-202018:59:14 IST Report Abuse
G.Sivasubframanian. எப்படி இருக்குன்னு பார்ப்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X