" தொங்கவிட்டு ஓவைசி தாடியை எடுப்பேன்"- பாஜ., எம்.பிக்கு ஏன் இவ்வளவு கோபம் ?

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (76)
Advertisement
Nizamabad, BJP_MP, Arvind, Owaisi, Hang, நிஜாமாபாத், பாஜக, எம்பி, அர்விந்த், ஓவைசி

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேசிவரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை, கிரேனில் தலைகீழாக தொங்கவிட்டு அவரின் தாடியை எடுப்பேன் என பாஜ., எம்.பி., அர்விந்த் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் டிச.,27 ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் ஓவைசி பேசியபோது, பிரதமர் மோடி, அனைத்து இந்தியர்களையும், நாட்டையும் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பாஜ., எம்.பி.,யான அர்விந்த் கூறியதாவது: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஓவைசியின் சகோதரரை, உங்கள் சமூகத்தை சேர்ந்தவராலே பல முறை குத்தப்பட்டு, சுடப்பட்டார். இதற்காக இப்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி இருக்கையில் ஓவைசி பாஜ.,வை அச்சுறுத்துகிறாரா?





நிஜாமாபாத்தில் உள்ள இட்கா மைதானத்தில் அவர்கள் பல கூட்டங்களை நடத்தியுள்ளனர். அதே மைதானத்தில், நான் ஒரு கிரேன் கொண்டு வந்து, ஓவைசியை தலைகீழாகத் தொங்கவிட்டு, அவரின் தாடியை எடுப்பேன்.
தெலுங்கானா முதல்வரின் மகன் ராமா ராவ், ஒரு நாத்திகர். இந்து தர்மத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? இந்த மக்கள் மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜ., பின்வாங்காது. எதிர்காலத்தில், அதிகமான சட்டங்கள் இயற்றப்படும். அந்த புதிய சட்டங்களுக்கு நான் பெயரிட மாட்டேன், ஆனால் இவை இயற்றப்படும். இவ்வாறு அர்விந்த் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
08-ஜன-202008:03:46 IST Report Abuse
Dr Kannan அரவிந்த் நாவிதர் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் செய்யும் தொழிலே தெய்வம்.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
05-ஜன-202023:05:24 IST Report Abuse
Allah Daniel அது உண்ணுமில்லை...ஓவேசி பாக்க கிழட்டு ஆடு மாதிரி இருக்கார்ல...அதான்...
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
05-ஜன-202023:05:21 IST Report Abuse
PANDA PANDI தாடியை மட்டும்தான் எடுப்பீர்களா.. வாயில வடை மட்டும் தான் சொம்புகள் சுடுவார்கள் என்று நினைத்தோம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X