ராஜஸ்தானில் 272; குஜராத்தில் 219 பிஞ்சு குழந்தைகள் பலி

Updated : ஜன 05, 2020 | Added : ஜன 05, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
பிகானீர்: ஒரே மாதத்தில் ராஜஸ்தான் மருத்துவமனையில் 272 பிறந்த குழந்தைகள், குஜராத்தில் 219 பிறந்த குழந்தைகள் உயிரிந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள சர்தார் படேல் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 162 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரிலுள்ள ஜே.கே.லான் அரசு
child_death,Rajasthan,Gujrat,ராஜஸ்தான்,குஜராத்,குழந்தைகள்_பலி,

இந்த செய்தியை கேட்க

பிகானீர்: ஒரே மாதத்தில் ராஜஸ்தான் மருத்துவமனையில் 272 பிறந்த குழந்தைகள், குஜராத்தில் 219 பிறந்த குழந்தைகள் உயிரிந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள சர்தார் படேல் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 162 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரிலுள்ள ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் 110 பிறந்த குழந்தைகள் கடந்த மாதத்தில் பலியாயினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராஜஸ்தானை ஆளும் காங்., கட்சியின் முதல்வரான அசோக் கெலாட், 'குழந்தைகள் இறப்பு ஒரு முக்கிய பிரச்னை. இதனை அரசியலாக்கக்கூடாது. ஒரு குழந்தை கூட சிகிச்சையின்போது உயிரிழக்கக்கூடாது என்பதில் அரசும், மருத்துவமனை நிர்வாகமும் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டியது கடமையாகும்' என்றார்.


latest tamil news




குஜராத்திலும்...


இதே போல், கடந்த ஒரே மாதத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் 134 பிறந்த குழந்தைகளும், அகமதாபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 85 பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு, குஜராத்தை ஆளும் பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

ராஜஸ்தான் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து பா.ஜ.,வினரும், குஜராத்தில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து காங்., கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜன-202016:33:00 IST Report Abuse
Endrum Indian குழந்தை இறப்பு என்று ஒன்றேயாடிகா முரசு கொட்டவேண்டாம்???இதைத்தான் நான் "Be Solution Oriented and Not Problem Oriented" என்று சொல்வது. அந்தத் குழந்தைகளை தவறான மருத்துவத்தால் மருத்துவர்கள் கொன்றார்களா??இல்லை அந்த குழந்தையின் தாய்கள் மருத்துவ குறை கொண்டதினால் அந்த குழந்தைகள் பிறந்த இறந்ததா என்று ஆய்வு செய்து அதற்கான சரியான தீர்வு சொல்லுங்கள். குழந்தை பிறந்தவுடன் இறந்தது??அய்யகோ எல்லாம் மோடியினால் தான் என்ற பிலாக்கணம் வேண்டாம்.
Rate this:
Cancel
06-ஜன-202016:19:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் , இத்தாலி ஆட்சி என்றால் அமைதியாகிவிடும் , டிசைன் அப்படி
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
06-ஜன-202013:31:09 IST Report Abuse
Selvaraj Thiroomal மத்திய மாநில அரசுகள் தங்கள் பொறுப்பிலிருந்து அரசு மருத்துவமனைகளை கழட்டிவிட விரும்புகிறது. பொது சுகாதாரத்திற்கும் கல்விக்கும் அரசு செலவிட விரும்பாதது நாளைய இந்தியாவை எல்லாவிதத்திலும் பாதிக்கும்..அந்த நிர்வாக விருப்பமின்மையே இந்த நிகழ்வுக்கு அடிப்படை.. அன்று ஆக்சிஜன் சிலிண்டருக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து மரணங்கள் நிகழ்ந்தபோதே அரசுகள் விழித்திருக்கவேண்டும்.. நடக்கவில்லை,, காரணம் விருப்பமில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X