அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை'

Added : ஜன 06, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : ''உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, அமைச்சர் ஜெயகுமார் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: நாங்கள், 'கூலாக' இருக்கிறோம்; மக்கள் பணி செய்வதே எங்கள் கடன். ஆனால், உள்ளாட்சி
 'ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை'

சென்னை : ''உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, அமைச்சர் ஜெயகுமார் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: நாங்கள், 'கூலாக' இருக்கிறோம்; மக்கள் பணி செய்வதே எங்கள் கடன். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.'முந்திரிக்கொட்டை அமைச்சர்' என என்னை கிண்டல் அடித்துள்ளார். முந்திரி என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது.

தி.மு.க.,வினர் தோலை உரிக்காமலே, பலாப் பழத்தில் சுளையை எடுக்கும் வித்தை தெரிந்தவர்கள். ஸ்டாலின் ஏன் இப்படி கோபப்படுகிறார் என்று தெரியவில்லை. மகத்தான வெற்றியை, அ.தி.மு.க., பெற்றுள்ளது. அதை மறைப்பதற்காக, ஸ்டாலின், இவ்வாறு குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். தேவையில்லாமல், தேர்தல் ஆணையத்தை வம்புக்கு இழுக்கிறார். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Namasivayam - CHENNAI,இந்தியா
07-ஜன-202009:01:22 IST Report Abuse
Namasivayam அவருக்கு சந்தோசம் இல்லைனு நீங்க எங்க கவலை படுறீங்க. அவர் பாட அவர் பார்ப்பார். உங்க வேலைய சரியாய் செய்ங்க.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
07-ஜன-202001:30:40 IST Report Abuse
dandy வடிவேலு குழந்தைகளுக்கு கூட தெரிந்த நடிகர் அதுமாதிரி நம்ம சுடலை கான்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
06-ஜன-202019:29:47 IST Report Abuse
Sampath Kumar அவரு மகிழிச்சிய இல்லையா என்பதை பார்ப்பது தான் உங்க வேலையா ? கவலை படுவதற்கு கவலை படுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X