சென்னை : ''உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, அமைச்சர் ஜெயகுமார் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: நாங்கள், 'கூலாக' இருக்கிறோம்; மக்கள் பணி செய்வதே எங்கள் கடன். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், ஸ்டாலின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.'முந்திரிக்கொட்டை அமைச்சர்' என என்னை கிண்டல் அடித்துள்ளார். முந்திரி என்பது, உடல் ஆரோக்கியத்திற்கானது.
தி.மு.க.,வினர் தோலை உரிக்காமலே, பலாப் பழத்தில் சுளையை எடுக்கும் வித்தை தெரிந்தவர்கள். ஸ்டாலின் ஏன் இப்படி கோபப்படுகிறார் என்று தெரியவில்லை. மகத்தான வெற்றியை, அ.தி.மு.க., பெற்றுள்ளது. அதை மறைப்பதற்காக, ஸ்டாலின், இவ்வாறு குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார். தேவையில்லாமல், தேர்தல் ஆணையத்தை வம்புக்கு இழுக்கிறார். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE