எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மனை உட்பிரிவு செய்தால் தான் பத்திர பதிவு; மோசடியை தடுக்க வருது புதிய கட்டுப்பாடு

Added : ஜன 06, 2020 | கருத்துகள் (11)
Advertisement
மனைஉட்பிரிவு,பத்திரபதிவு,மோசடி,புதியகட்டுப்பாடு

வீட்டு மனைகள் விற்பனையில் மோசடியை தடுக்க, பத்திர பதிவுக்கு முன், நில அளவை உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற, புதிய கட்டுப்பாடு விரைவில் அமலுக்கு வர உள்ளது.தடை விதிப்புதமிழகத்தில் வீடுகள், மனைகள் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதன்படி, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள், மனைகளின் விற்பனை பதிவு முடிந்தவுடன், பட்டா பெயர் மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பத்திரப்பதிவின் போதே, பட்டா பெயர் மாற்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு, வருவாய் துறைக்கு அனுப்பப்படுகிறது.சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரும் விபரங்கள் அடிப்படையில், பட்டா பெயர் மாற்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மனைகளை உட்பிரிவு செய்ய தாமதமாவதால், பட்டா பெயர் மாற்றம் சிக்கலாகிறது.

சொத்துக்களை வாங்குவோர், பத்திரப்பதிவுக்கு முன், நில அளவை செய்வதில்லை என்பதால், பத்திரத்தில் இருக்கும் அளவுக்கும், பட்டாவில் வரும் அளவும் வேறுபடுகிறது.இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வாக, பத்திரப்பதிவுக்கு புதிதாக சிலகட்டுப்பாடுகளைவிதிக்க, வருவாய் துறை ஆலோசித்து வருகிறது.பெயர் மாற்றம்இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிலத்தை முழுமையாக விற்றால், பட்டா மாற்றத்தில் பிரச்னை இல்லை. நிலத்தின் ஒரு பகுதியை வாங்குவோர், அதை உட்பிரிவு செய்ய, நில அளவையாளர் வருகைக்காக, காத்திருப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மனைப்பிரிவுகளை உருவாக்குவோர், நிலத்தின் ஒரு பகுதியை விற்பவர்கள், பத்திரப்பதிவுக்கு முன், உரிய முறையில் உட்பிரிவு செய்ய வேண்டும். உட்பிரிவு செய்யப்பட்ட பாகத்தை, அவர் கிரையப்பத்திரம் வாயிலாக விற்கலாம்.

உட்பிரிவு செய்யப்பட்டது உறுதியானால் மட்டுமே, சம்பந்தப்பட்ட பத்திரம் பதிவுக்கு அனுமதிக்கப்படும். இவ்வாறு செய்வதால், பத்திரப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே, பட்டா பெயர் மாற்றம் முடிந்து விடும்.புதிய கட்டுப்பாடுகளை, சட்டத் திருத்தம் வாயிலாக அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம். இதற்கான பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜன-202009:56:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னைப்போல பருக்கும் நிலமே இல்லீங்க பகவான் புண்ணியத்துல வாங்கின ஒரு வீடுதான் இருக்கு அதற்கு ஒளுங்க வீட்டுவரி கட்டிண்டுருக்கோம் வரும் பேங்க்ஷனிலே வாழ்க்கை ஓடுது மேக்சிமம் அரசியல்வியாதிகளேதான் முன்னாள் அண்ட் இந்நாள் நபர்கள் வாங்கிகுவிச்சுண்டுட்டு வரியும் காட்டாமல் அரசாங்கம் தன்னை ஏய்க்கிறானுக ஒரு முன்னாள் நிதி மாதிரியே இவ்ளோபெரிய பிராடுபண்ணிருக்கான் (அவ்ளோதான் மரியாதை இம்மாற்றுவேலை எவன் செய்தாலும் அவன் பிராடுதானுங்கோ கண்ணதாசன் சொன்னதுபோல ஆரடிநிலமே சொந்தமடா (அதுவும் போதைச்சால் தான் எரிச்சால் சாம்பல் அதையும் ஓடுறானேதிலே கரைச்சுடுவாங்க )வறட்சையும் அம்மணம் போராட்சையோ நிர்வாணம் என்று சொன்னவர் மஹாவீரர்
Rate this:
Share this comment
Cancel
08-ஜன-202017:44:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உணவு , உடை , உறைவிடம் என்ற அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உறைவிடம் தான் தற்போது ஏழை , நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ப்ரோக்கர்கள் தூங்கி எழுந்தால் ஒரு விலை சொல்லுகிறார்கள். அரசு விலை நிர்ணயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
06-ஜன-202016:11:04 IST Report Abuse
thulakol அரசின் இந்த முடிவு மக்களுக்கு பயன் அளிக்கும் . அனால் மணியக்காரர் ஒத்துழைக்க வேண்டும் வேலை சீக்கிரம் முடிய .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X