குடியுரிமை திருத்த சட்டம் என்பது, யாருடைய குடிஉரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை; அதனால், இதை வைத்து பொய் தகவல்களை பரப்பி, குழப்பத்தை உண்டாக்குகின்றன. குடிஉரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இணைத்து, பிரச்னையை உருவாக்குகின்றனர். மக்களுக்கு உள்ள குழப்பத்தை தீர்க்க வேண்டும்.
-நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,
வெளியேற்ற வேண்டும்!
நிடி ஆயோக் வெளியிட்டுள்ள சிறந்த மாநிலங்களில், பீஹார் கடைசி இடத்தில் உள்ளது. இறக்கை இல்லாதபோது பறக்க முயற்சிக்கக் கூடாது. இந்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசை வெளியேற்ற வேண்டும்.
-லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
அவமானமான செயல்!
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள், எந்தவித விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர். இதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, உத்தர பிரதேச பா.ஜ., அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதுடன், அது பெருத்த அவமானமான செயல்.
-மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE