பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான

இந்த செய்தியை கேட்க

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.latest tamil newsதிருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது.

இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது.


பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக, ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு, 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை இருந்தார். மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜன-202013:53:41 IST Report Abuse
Ramki தூய்மை யோகமாகினான் துழாய் அலங்கமாலயான்ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவா நின் நாம தேய மின்னதென்ன வல்லமல்ல தாயினும் சாமவேத கீதநாய சக்ரபாணியெல்லயே ஓம் நமோ நாராயணா‌ ஓம் நமோ நாராயணா
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
06-ஜன-202011:24:05 IST Report Abuse
தமிழ்வேள் .இவ்வளவு அழகாக பாசுரம் சொல்லும் நீர் ஏன் போயும் போயும் சுட்லை திருட்டு கட்டுமரம் ஆகியோருக்கு குடை பிடிக்கிறீர்? அந்த பயல்களுக்கு சப்போர்ட் செய்வதே பெரும்பாவம். விட்டுவிடும்....
Rate this:
Cancel
ஜானகி ஸ்ரீனிவாசன் பரமபத வாசல் கைகளுக்குள் திறக்க மனம் லயிக்க சேவை சாதித்தார். அரங்கன் என் இடம் தேடி வரும் வயது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X