பொது செய்தி

இந்தியா

வருமான வரித்தாக்கலில் 2 புதிய மாற்றங்கள்

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (8)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தனிநபர் அல்லது கூட்டாக சொத்து வைத்திருப்போர் வருமான வரித்தாக்கல் செய்யும் முறையில் 2 புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.





பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தனிநபர்கள் தங்களின் வருமான வரியை செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தும். அதன்படி 2020-21 ம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரித்தாக்கலில் சொத்து குறித்த விபரத்தில் 2 மாற்றங்களுடன்,ஜன.,3 ம் தேதி வருமான வரித்தாக்கல் அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வீட்டு சொத்தில் கூட்டு பங்கு இருக்கும் தனிநபர்கள் ஐடிஆர் -1 அல்லது ஐடிஆர்-4 படிவங்களை இணைக்க முடியாது. இதே போன்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருப்பு வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு பயண செலவு அல்லது மின் கட்டணம் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக செலவிடுபவராக இருந்தால் அவர்களுக்கு ஐடிஆர் - 1 படிவம் பொருந்தாது. இந்த விதிகளின் கீழ் வருவோர் வேறு படிவங்களை பூர்த்தி செய்து, தாக்கல் செய்ய வேண்டும்.





ரூ.50 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்- 1 படிவம் பொருந்தாது எனவும், ரூ.50 லட்சம் வரை வருமானம் உடைய தொழிலதிபர்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு ஐடிஆர்-4 படிவம் மட்டுமே பொருந்தும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜன-202016:25:18 IST Report Abuse
Endrum Indian ரூ.50 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்- 1 படிவம் பொருந்தாது???அப்படியென்றால் என்ன???ரூ.50 லட்சம் மேற்பட்ட வருமானம் கொண்டவர்களுக்கு ???
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
06-ஜன-202013:21:00 IST Report Abuse
M.COM.N.K.K. GST வரியை மட்டும் வைத்துக்கொண்டால் அரசுக்கு வருமானம் குறைந்துவிடும்.GST வரிவருமானம் என்பது வேறு வருமானவரி என்பது வேறு.வருமானவரியில் மொத்த வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் GST யில் அப்படியில்லை கொள்முதல் விற்பனை மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.GST யில் 0% க்கு வரி கிடையாது ஆனால் வருமானவரி கணக்கில் 0% க்கும் வரிசெலுத்தவேண்டும்.ஆகவே வருமான வரியை நீக்கிவிட்டு GST வரியை மட்டும் நடைமுறைப்படுத்துவது முடியாது என்றே நினைக்கிறோம்.இது சாத்தியமாகாது.மேலும் வருமான வரி கணக்கில் INCOME FROM OTHER SOURCES கணக்கில் வரவேண்டும்.ஆகவே GST மற்றும் INCOME TAX ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
06-ஜன-202012:55:36 IST Report Abuse
Selvaraj Thiroomal சு.சாமியை நிதியமைச்சராக போட்டு முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். கடந்த ஆறு வருடமாக தினம் ஒரு மாறுதல் செய்வதே இவர்கள் வேலை. மைனஸ் வளர்ச்சியை நோக்கி நாடு போய்க்கொண்டுள்ளது.. இந்நேரத்தில் மக்களுக்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து தவறு செய்யவைக்கிறார்கள்...பிறகு அந்த இளிச்சவாயர்களை குற்றவாளியாக்குவார்கள்... சே, நிர்வாகமா இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X