அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம்: கவர்னருடன் ஸ்டாலின் வாக்குவாதம்

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (140)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : 2020 ம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,06) காலை துவங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுக.,வினர் வெளிநடப்பு செய்தனர்.latest tamil news


தமிழில் வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் எனக் கூறி கவர்னர் பன்வாரிலால் உரையை ஆங்கிலத்தில் துவக்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், பேச முயன்றார். அதற்கு பதிலளித்த கவர்னர், பிரச்னைகளை பற்றி விவாதிக்க மட்டுமே சட்டசபையை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்தினார்.
இதனையடுத்து திமுக.,வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உரையை தொடர்ந்த கவர்னர், தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை சிறப்பாக செய்து வருகிறது.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பிற்கு தமிழக போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அமைதியான முறையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். ஜிஎஸ்டி இழப்பீடாக இந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.7000 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. ரூ.563.30 கோடியில் மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக மத்திய அரசு அனுப்பி உள்ளது.


latest tamil newsபரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னையை தீர்க்க தமிழக-கேரள முதல்வர்கள் சந்தித்து பேசியது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி பெண்ணையாற்று படுகையில் கர்நாடகா அணை அமைக்க முடியாது. கர்நாடகா, காவிரியின் குறுக்கே எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று சரியான நேரத்தில் ஆந்திர முதல்வர் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவிட பணிகள் விரைவில் முடிவடையும்.
சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களால் அரசின் நலத்திட்டப் பணிகளை மக்கள் எளிதில் பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
06-ஜன-202022:05:18 IST Report Abuse
Ganesan.N மம்தா பானேர்ஜீ மற்றும் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் வரிசையில் ஸ்டாலின் அவர்களும் கவர்னரை அவமதிக்க கற்றுக் கொண்டு விட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
06-ஜன-202018:57:58 IST Report Abuse
N.DURAI எதற்கு தேர்ந்தெடுத்தோம் என்று இவரை தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப் படட்டும்...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
06-ஜன-202020:41:07 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு கண்டிப்பா டயரை கும்பிடுவதும் அடிமைகளாக இருப்பதையும் நினைத்து மனம் புழுங்குவார்கள் வீரம் மிக்க தமிழ் நாட்டில் கூன்பாண்டியர்களை தெரியாமல் தேர்ந்து எடுத்துவிட்டோமே என்று கஷடப்படுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
06-ஜன-202018:47:04 IST Report Abuse
N.DURAI இத்தனை வயதாகியும் கொஞ்சம் கூட நாகரிகம் தெரியவில்லையே , கவர்னர் பேசிய பிறகு பேசாமல் , கவர்னரை பேச்சையே இடைமறிக்கும் செயல் அநாகரீகமானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X