சரத் பவார் தான் ஜனாதிபதி வேட்பாளர் : சிவசேனா ஆசை

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (57)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : 2022 ஜனாதிபதி தேர்தலில், தங்கள் கட்சி சார்பில் தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவாரின் பெயர், ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படும் என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.






பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சஞ்சய் ராவத் கூறுகையில், சரத் பவார், நாட்டின் மூத்த அரசியல் தலைவர். 2022 ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு அவரது பெயரை அனைத்து கட்சிகளும் பரிந்துரைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் அளவிற்கு 2022 ல் எங்களின் பலம் அதிகரிக்கும். மற்ற அரசியல் கட்சிகளும் எங்களின் பரிந்துரையை ஏற்பார்கள் என நினைக்கிறேன், என்றார்.




பல்வேறு அமைச்சக பொறுப்புக்களை வகித்துள்ள சரத் பவார், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார். மத்திய அமைச்சராகவும், 4 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். மஹாராஷ்டிராவில் காங்., - சிவசேனா கூட்டணி அமைந்து, கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவரும் சரத் பவார் தான். இதன் காரணமாகவே சரத் பவாரின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்க சிவசேனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
07-ஜன-202006:21:29 IST Report Abuse
jambukalyan கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கழுதை கூட தன் கருத்தைச் சொல்லும்,
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
07-ஜன-202000:06:49 IST Report Abuse
Aarkay ஐம்பது MLA-க்களை வைத்துக்கொண்டு இவர்கள் தீர்மானிப்பார்களாம் செம காமெடி
Rate this:
Share this comment
Cancel
06-ஜன-202023:36:15 IST Report Abuse
ருத்ரா மஹாவிற்கு மட்டும் தனி ஜனாதிபதி? ஆசை இல்லை பேராசை. தனி இராஜாங்கமா. அல்லது மகனை பிரதமராக்கும் கனவா? இத்தாலிவாரிசுக்கு மறைமுக எச்சரிக்கையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X