டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி: ஈரான் விலை

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
Trump,QasemSoleimani, DonaldTrump, Iran, America, Head, 80USD, சுலைமானி, ஈரான், இறுதிஊர்வலம், அமெரிக்கா, அதிபர், டிரம்ப், டொனால்ட்டிரம்ப், தலை, பரிசு,

இந்த செய்தியை கேட்க

டெஹ்ரான்: அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஈரான் முக்கிய படைத் தளபதி குவாசிம் சுலைமானி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.576 கோடி பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.


latest tamil news



ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்தது. அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் சமீபத்தில் தீவிரமடைந்தது. ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, சமீபத்தில் ஈராக் சென்றிருந்தார். அப்போது அமெரிக்க படைகள், ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் எனவும் எச்சரித்தது.


இந்நிலையில், சுலைமானி உடல், அஹ்வாஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், தெஹ்ரானில் உள்ள என்கேலாப்-இ-எஸ்லாமி (இஸ்லாமிய புரட்சி) சதுக்கத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சுலைமானியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது.

அப்போது பெயர் வெளியிடப்படாத மூத்த அதிகாரி ஒருவர் பேசுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 8 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசாக வழங்கப்படும். ஈரானில் 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தலா 1 டாலர் வீதம் 8 கோடி டாலர் பெற்று பரிசு வழங்கப்படும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
08-ஜன-202019:30:04 IST Report Abuse
Sampath Kumar நான் முனபே பதிவு இட்டேன் அது உண்மை ஆகிவிட்டது அமெரிக்கா தான் இந்த உலகின் மூர்க்கன்
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
07-ஜன-202016:58:09 IST Report Abuse
oce எண் கணித படி 786 ஐ சுருக்கினால் வரும் மூன்றாம் எண் குருவினுடைய எண். குரு மனித குலத்தை வாழ்விக்கும் கிரகம். ஆன்மீகத்தை தரும் கிரகம்.. ஆனால் எந்த பாயும் குருவை வணங்கமாட்டான். தீவிரவாதம் தான் அவர்களது ஆன்மீகம். .
Rate this:
Cancel
07-ஜன-202007:15:23 IST Report Abuse
K R Ramakrishnan Ramakrishnan 576 கோடி மிக குறைவான தொகை இதற்காகவே டிரம்பு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாக்குதல் வீடியோ வாட்ஸ்அப்பில் வந்து விட்டது.விண்ணில் இருந்து முழு கண்காணிப்பு உள்ளது.பச்சைகள் ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X