தாக்குதலில் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி.,க்கு தொடர்பு: கோஷ் குற்றச்சாட்டு

Updated : ஜன 06, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
JNUTerrorAttack,JNUViolence, Delhi, JNU, JNUSU, President, AisheGhosh, ABVP, RSS, ஜேஎன்யூ, தாக்குதல், டில்லி, ஏபிவிபி, ஆர்எஸ்எஸ்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி ஜே.என்.யூ., பல்கலையில் நடந்த தாக்குதலில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஏபிவிபி அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக, காயமடைந்த மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றிரவு (ஜன.,05) டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., (ஜே.என்.யூ.,) வளாகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள், பல்கலை., மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகளை கொண்டு கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் அந்த மர்மநபர்கள் பலமாக தாக்கினர். இதில், மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சில பேராசிரியர்கள் காயமடைந்தனர்.


latest tamil news



இது தொடர்பாக காயமடைந்த அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். வன்முறையாளர்களை காவலாளிகள் தடுக்கவில்லை. காவலாளிகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கிறது. தாக்குதலின்போது எங்கள் பெயரை சொல்லியே தாக்கினர். இது ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஏ.பி.வி.பி., அமைப்பினர்கள் சேர்ந்து செய்த தாக்குதலாகும். கடந்த 4 நாட்களாக பல்கலை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. நாங்கள் வன்முறையாக கண்டிக்கிறோம். திடீரென உள்ளே நுழைந்த சிலர், உருட்டு கட்டை, சுத்தியல், கம்பிகள், கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். பல்கலை துணைவேந்தரை உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அய்ஷி கோஷ் பேசினார்.


ஏபிவிபி போராட்டம்


அதேநேரத்தில் பல்கலையின் வெளியே ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும், மாணவர் சமூகத்தை காத்திடுங்கள் எனவும் போராட்டம் நடத்தினர்.


பேரணி:


இந்நிலையில் தாக்குதலை கண்டித்து, ஜே.என்.யூ., பல்கலை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்கலை வளாகத்தில் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
07-ஜன-202013:46:11 IST Report Abuse
மூல பத்திரம் ரயிலை கொளுத்தியது, தண்டவாளங்களை தகர்த்தவர்களை முதலில் கைது செய்யுங்கள். இத அப்புறம் பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Rocky - Doha,கத்தார்
07-ஜன-202010:32:47 IST Report Abuse
Rocky பல ஆண்டுகாலமாக இந்த Delhi- JNU கல்லூரி மாணவ மாணவிகள் தேசத்திற்கு எதிராகவும், தேச பாதுகாப்புக்கு எதிராகவும், நக்ஸல்களுக்கும், காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தின என்பதை மறுக்கமுடியுமா, இந்த கல்லூரி மாணவி/மாணவர்களில் போதை பொருள் விநியோகிப்போர், பயன்படுத்துவோர் அதிகம் என்பது தெரியுமா? உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் இந்த கல்லூரியை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நக்சல்கள், மற்றும் பல தீவிரவாத இயக்கங்கள் பல சந்தர்ப்பங்களில் இதுநாள்வரை பணம் கொடுத்து போராட வைத்தது தெரியுமா? ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்த கல்லூரி கெட்டு சீரழிந்ததன் எதிர்வினைதான் இப்போது அவர்களுக்கு எதிரான தாக்குதல்.
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
07-ஜன-202009:44:40 IST Report Abuse
மூல பத்திரம் ஆதாரம் எங்கே சுர்ஜிக்கல் strike க்கு மட்டும் ஆதாரம் வேண்டும் இதற்க்கு வாய்க்கு வந்ததெல்லா பேசலாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X