சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 06, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஓகோ, அதனால் தான், உங்கள் தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணியை, 'கார்னர்' செய்து வருகிறாரோ; புரிந்து விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேட்டி: தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், எங்கள் கட்சி சற்று, 'வீக்' ஆகத் தான் உள்ளது. அதற்கு காரணம், அந்த மண்டலத்திலிருந்து அமைச்சர்களாக ஆகியுள்ள வேலுமணி மற்றும் தங்கமணி தான். அவர்களுக்கு பணம் இருக்கிறது. அதனால், மக்களை தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்.

***

'உங்களின் ஆசை சரி தான். இந்த பேச்சு, கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வுக்கு வாக்காளர்கள் கணிசமான வெற்றியைத் தந்துள்ளனர். எனவே, தமிழகத்தில், பா.ஜ., காலம் துவங்கி விட்டது. தனித்து போட்டியிட்டு, செல்வாக்கை காட்ட வேண்டும் என்பது தான், என் தனிப்பட்ட விருப்பம்.

***

'தேசிய மக்கள்தொகை பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், எப்படி, முஸ்லிம்கள், 13 சதவீதம் உள்ளனர் என்பதை கண்டறிந்தீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: நாட்டின் மக்கள்தொகையில், 13 சதவீதமாக உள்ள முஸ்லிம்களின் பண்டிகை நாட்களை, தேசிய மக்கள்தொகை பதிவேடு கையேட்டில் இருந்து, மத்திய, பா.ஜ., அரசு விலக்கியுள்ளது. இது, அப்பட்டமான ஹிந்துத்துவா மனப்பான்மை. இந்த போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

***

'உங்கள் கோரிக்கையை, தமிழக, அ.தி.மு.க., அரசு கேட்கும் என்ற நம்பிக்கை, உங்களுக்கு இன்னும் இருக்கிறதா...' என, கிடுக்கி போடும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கண்டுள்ள தோல்வியை படிப்பினையாக வைத்து, பா.ஜ.,வுடனான உறவை துண்டிக்க வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவு, மக்கள் தொகை பதிவு போன்றவற்றை ஏற்க மாட்டோம் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

****

'முள்ளை முள்ளால் எடுப்பது என்பது இது தானோ...' என, பாராட்டத் தோன்றும் வகையில், பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசன் பேட்டி: குடியுரிமை சட்ட திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொண்ட பொய் பிரசாரத்தை, அதே சிறுபான்மையினத்தவரை வைத்தே பொய் என்பதை விளக்கி, பேரணி நடத்தியுள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X