கலவரத்தை தூண்டும் காங்., - ஆம் ஆத்மி: அமித் ஷா ஆவேசம்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 06, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
AmitShah,BJP,CAB,CitizenshipAmendmentBill,Congress,AAP,அமித்ஷா,காங்,ஆம்ஆத்மி

புதுடில்லி: “காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், மக்களை தவறாக வழிநடத்தி, டில்லியை கலவரத்தால் எரித்து, பாவம் செய்து வருகின்றன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசத்துடன் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷா, டில்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: காங்., - ஆம் ஆத்மி கட்சிகள், டில்லி மக்களையும், இளைஞர்களையும் தவறாக வழிநடத்தி, கலவரத்தால், தேசிய தலைநகரை எரித்து பாவம் செய்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இங்கு நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும், அவ்விரு கட்சிகளே காரணம். வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அவர்கள் வீட்டிற்கே சென்று, நலன் விசாரித்து வருவது, வெட்கமாக இல்லையா?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமையை வழங்கும் சட்டத்தை, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். திருத்தப்பட்ட அந்த சட்டத்தில், மக்களின் குடியுரிமையை பறிக்கும் விதிகள் எதுவும் இல்லை. ஆனால், ராகுலும், பிரியங்காவும், நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களை தவறாக வழிநடத்தி செல்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால், சிறுபான்மையினர், தங்கள் குடியுரிமையை இழக்க நேரிடும் என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு மட்டுமே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது பிரிவை ரத்து செய்த தைரியம் உள்ளது. இப்போது, காஷ்மீரில் மூவர்ண தேசிய கொடி பறக்கிறது. இனி, இந்தியாவில் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி, இரட்டை நிலைப்பாடை கொண்டிருந்தது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, அந்த பிரச்னையில் தீர்வு காணாமல் தாமதம் செய்து வந்தது. ராகுலும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எது வேண்டு மானாலும் செய்யட்டும்; வானுயர்ந்த கோபுரத்துடன், அயோத்தியில், ராமர் கோவில் விரைவில் அமையும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
07-ஜன-202018:42:47 IST Report Abuse
Suri நாடே பொருளாதார பின்னடைவில் சீர்குலைந்துகொண்டிருக்கிறது .. அனைவரும் அதை பற்றி பேசி அதை சீர் திருத்த வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
07-ஜன-202012:39:18 IST Report Abuse
Ab Cd கலவரத்தாலேயே வளர்ந்த கட்சி, அடுத்த கட்சிய பார்த்து கலவரத்தை தூண்டுகிறது என்பது வேடிக்கையாக இருக்கிறது
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
08-ஜன-202011:21:27 IST Report Abuse
Sathya Dhara .....உன்னையும் உன் கும்பலையும் போலெ அனைவரும் இருப்பாங்க என்று நினைத்து கருத்து எழுதுவது வேடிக்கையாக உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
07-ஜன-202010:39:20 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அந்த பிசாசுகளை எல்லாம்தூக்குங்க இல்லை என்றால் நாடு முழுதும் போராட்ட களம் ஆகிருவார்கள் இன்னும் நாலு அரை வருடம் முழுதும் நாட்டு மக்களை நிம்மதி ஆஹா இருக்க விட மாட்டார்கள் ,தூக்குங்க udane
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
07-ஜன-202013:44:52 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நாங்கள் தான் செய்தோம் என்று உங்க ஆதரவு இயக்கம் ஒத்து கொண்டது இப்ப உங்களை தான் தோக்கணும் தூக்கினாள் வில்லை என்றால் நாலு அரை வருடம் முழுதும் நாட்டு மக்களை நிம்மதி ஆஹா இருக்க விட மாட்டார்கள் ,தூக்குங்க udane...
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
08-ஜன-202011:22:40 IST Report Abuse
Sathya Dhara நாங்கள்தான் செய்தோம்.......என்பதும் கான் கிராஸ் கட்டுமர கூட்டு க ல வா நீ ஸ்ஸ் வேலை.....மக்களுக்கு புரியும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X