பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சிகளில் 50 சதவீதம்; வந்தது பெண்கள் ஆட்சி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (5)
Advertisement
LocalBodyElection,Ladies,உள்ளாட்சி,பெண்கள்_ஆட்சி

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.

தமிழகத்தில் ஊரகம் நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை 50 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பை 2016ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்டார். அதே ஆண்டு பிப். மாதம் சட்டசபையில் இது தொடர்பான சட்டமும் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி 2016 அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. தி.மு.க. தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் மூன்று ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்து வார்டுகள் வரையறை செய்யப்பட்டன. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு நேற்று நடந்தது. இதில் வெற்றிப் பெற்ற 50 சதவீத பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பொறுப்பேற்றனர். இவர்களில் 20 வயது முதல் 70 வயதுக்கு மேற்பட்டோரும் அடக்கம்.

புதிதாக பொறுப்பேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் முதல் முறையாக 50 சதவீதம் பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
07-ஜன-202021:07:46 IST Report Abuse
siriyaar விரைவில் ஆண்கள் நிலை மேலும் கேவலமாகும். தற்பொது 59 சதவிகிதம் பென்கள் ஆகிவிட்டனர். பொதுவை நீக்கி ஆண் பாதி பெண் பாதி என்று மாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-ஜன-202008:15:47 IST Report Abuse
ஆரூர் ரங் இதில் 90 % பெண்கள் பினாமிகள்தான் . உண்மையாகவே சேவை மனப்பான்மையோடு வரும் பெண்களும் பதவிக்காலத்திலேயே மகப்பேறு , பிள்ளை வளர்ப்பு குடும்பச்சுமை போன்ற காரணங்களால் செயலபடுவதில்லை. கணவர் தந்தை சகோதரர் போன்றவர்களே ஊராட்சியமைப்புக் கூட்டங்களை நடத்தும் சட்டவிரோதப்போக்கு தொடர்கிறது. முழுமையான பெண்ணதிகாரம் சமத்துவம் வர இன்னுமொரு தலைமுறையாகும் (பின்குறிப்பு இப்போதே இவர்களுக்கியிடையே சில சொர்ணக்கா களுமுண்டு
Rate this:
Share this comment
Madhav - Chennai,இந்தியா
07-ஜன-202017:19:42 IST Report Abuse
Madhavஇன்று வந்தவர்களை வரவேற்போம். இன்னமும் பலர் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்போம் மகப்பேறு போன்றவை இயல்பானவை, மனிதர்கள் சாப்பிடும் தூங்கும் நேரத்தை தவிர்த்தால் வேகமாக முன்னேறுவோம் என்பது போல உள்ளது உங்கள் கருத்து. இந்தியர்களின் வாழ்க்கை சில நூறு ஆண்டுகளில் எவ்வளவோ முன்னேறியுள்ளது, அது போலவே இந்த பெண்களும் மிக சிறப்பாக மாறுவார்கள் என்று நம்புவோம்....
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-ஜன-202007:50:46 IST Report Abuse
RajanRajan ரொம்ப சந்தோசம். எல்லோரும் டான்சிராணியாகாமல் தேசப்பற்று மிக்க நேர்மையான ஜான்சிராணியாக வாழ்த்துறோமுங்க. உசார் உசார்.மக்களே யாரு கல்லா கட்டுறாங்கன்னு நோட்டம் விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X