அடிக்கிற காசுல வீட்ட கட்டு... பறக்கிற படையில வாரிச்சுருட்டு!| Dinamalar

'அடிக்கிற' காசுல வீட்ட கட்டு... 'பறக்கிற படையில' வாரிச்சுருட்டு!

Added : ஜன 07, 2020
Share
திகாலை நேரத்திலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா தரிசனம் செய்ய காத்திருந்தனர். அதே நீ...ண்ட வரிசையில், சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.அப்போது, வெள்ளை வேட்டி, சர்ட் சகிதம், கரை வேட்டிகள் கோவிலுக்கு சென்றனர்.''ஏங்க்கா... இவங்க 'க்யூ'வில் வரமாட்டாங்களா?''''அவங்க எப்பவும் குறுக்கு வழிதானே. உனக்கு தெரியாதா? திருப்பூர்
 'அடிக்கிற' காசுல வீட்ட கட்டு... 'பறக்கிற படையில' வாரிச்சுருட்டு!

திகாலை நேரத்திலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா தரிசனம் செய்ய காத்திருந்தனர். அதே நீ...ண்ட வரிசையில், சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.அப்போது, வெள்ளை வேட்டி, சர்ட் சகிதம், கரை வேட்டிகள் கோவிலுக்கு சென்றனர்.''ஏங்க்கா... இவங்க 'க்யூ'வில் வரமாட்டாங்களா?''''அவங்க எப்பவும் குறுக்கு வழிதானே. உனக்கு தெரியாதா? திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் எப்படியாவது, எல்லா பஞ்சாயத்தையும் புடிச்சுறோணும்னு முடிவு செஞ்சு, அந்த பொறுப்பை 'கான்ட்ராக்டர்'கள்கிட்ட, ஆளுங்கட்சிக்காரங்க ஒப்படைச்சாங்களாம்,''''ஏன்.. தோத்துட்டாங்களா?''''ம்... ஹூம் அவங்களால முடியல. பணத்தை 'தண்ணி'யா செலவு பண்ணியும் பிரயோஜனம் இல்லையாம். ஏடி., காலனி பூராவும், தலைக்கு 500ம், 'சரக்கும்' கொடுத்திருக்காங்க. ஆனா, இத்தனையையும் மீறி, தொரவலுார், சொக்கனுார், வள்ளிபுரம்னு பல ஊராட்சிகளில், சுயேச்சைகள் ஜெயிச்சிட்டாங்க,''''அக்கா... மக்கள் முடிவு பண்ணிட்டாங்கன்னா யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது. இப்படித்தான் பாருங்க, தாராபுரத்தில் ஒரு 'லேடி' ஆபீசர் மேல, புகார் மேல புகார் வாசிக்கிறாங்களாம்,''''அப்படியா... என்ன புகார்?''''அங்கே, தாசில்தார் கிரேடில் ஒரு லேடி ஆபீசர் இருக்காங்க. அவங்க, புரோக்கர்களை கைக்குள்ள போட்டு, 'கண்டிஷன் பட்டா' பூமிகளுக்கு, என்.ஓ.சி., கொடுத்து விளையாடியிருக்காங்க,''''அப்படி, ஒரே நேரத்துல, 80 பேருக்கு என்.ஓ.சி., கொடுத்திருக்காங்களாம். இதேமாதிரி, ஆதரவற்ற விதவை சான்று, தரிசு நிலசான்றுனு பல முறைகேடு நடக்குதுனு மக்கள் புகார் கொடுத்திருக்காங்க,''''சர்டிபிகேட்' கம்ப்யூட்டர்ல வந்தும் கூட, தரிசு நில சான்று மட்டும் கையில எழுதி கொடுத்து, ஊழல் செஞ்சு, பல லட்சம் சம்பாதிச்சு, திண்டுக்கல்லில், 80 லட்சம் ரூபாய்க்கு, ஒரு வீடு வாங்கி, அதில், 15 லட்சத்துக்கு 'இன்டீரியர் டெக்ரேஷன்' செய்றாங்களாம்''''ஏண்டி மித்து, இதெல்லாம் அந்த வடநாட்டு அதிகாரிக்கு தெரியாதா?''''ஆமாங்க்கா... அவருக்கு தமிழ் தெரியாததை தனக்கு சாதகமாக்கிட்டு, இப்படி அநியாயம் நடக்குது,'' என்ற மித்ரா, ''அக்கா, நடராஜர், 'சிவகாமி'அம்மன் தரிசனம் எப்ப நடக்குது?'' சந்தேகம் கேட்டாள்.''வர்ற, 10ம் தேதி. இதே மாதிரி அதுக்கும் வந்திடலாம்,'' என்ற சித்ரா கடிகாரத்தை பார்த்தாள்.அதை கவனித்த மித்ரா, ''இன்னும் 'ஒன் ஹவர்' ஆயிடும்போல,'' என்றதும், அவ்வழியே வருவாய்த்துறை ஜீப் சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, சேவூரில், மண் கடத்தல் லாரி மேல், எந்த 'ஏக்ஷனும்' எடுக்காம போலீஸ் விட்டுட்டாங்களாம்,'' என்றாள்.''ஆமாங்க்கா... ரெண்டு நாளைக்கு முந்தி, ராத்திரியில், மண் ஏத்திட்டு வந்த லாரியை, ஆர்.ஐ., புடிச்சு, போலீசில் ஒப்படைச்சாரம்,''''ஆனா, ரெவின்யூதான் பொறுப்புனு சொல்லி, போலீசார் ஒதுங்கி விட்டனர். இதில, ஒரு விஷயம் என்னன்னா... மண் கடத்தலை ரெவின்யூ பிடிச்சாங்கன்னா, 25 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். வண்டியோட லைசென்ைஸயும் கேன்ஸல் செய்ய முடியும்,''''இதை தெரிஞ்சுகிட்ட கடத்தல்காரங்க, 'மாமூல்' பலமாக கவனிச்சதால, ரெவின்யூ சைடில் 'கப்சிப்' ஆயிட்டாங்களாம். போலீசும், நமக்கென்னன்னு ஒதுங்கியதால், வண்டிகள் மட்டும் ஸ்டேஷன் முன்னாடி நிக்குதாம்,''''யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' அப்படீன்னு சொல்றதை போல, மண் மேட்டரில், அதிகாரிங்க அள்ளி குவிச்சிட்டேதான் இருக்காங்க. கலெக்டரும், ரொம்ப 'சாந்த'மாவே இருக்காரு,''''ம்... அவரு நடவடிக்கை எடுப்பாருன்னு நம்புவோம்,'' என்ற சித்ரா, சுகாதாரத்துறை சார்பில், வினியோகிக்கப்பட்ட 'டெங்கு' விழிப்புணர்வு பிரசுரத்தை படித்தாள்.''அக்கா, இந்த 'டெங்கு' நோட்டீசை பார்த்ததும் எனக்கு ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்திடுச்சு. கிராமங்களில் சுகாதாரப்பணி செய்ய, கோடை காலத்தில், 20 பேரும், மழை சீசனில், 40 பேரையும் அப்பாயின்ட்மென்ட் செய்வாங்களாம்,''''அப்படி, 'பொங்கு' யூனியனில், உள்ள சில கிராமங்களில் 'டெங்கு' பாதிப்பு இருந்தப்ப, 40 பேர் எடுத்திருக்காங்க. ஆனால், 10 பேர் தான் வேலைக்கு வந்தாங்களாம். இதில, நிறைய பேர் வந்ததா, 'சைன்' போட்டு, பல ஆயிரங்களை சுருட்டியதாக ஒரு தகவல் உலா வருது,''''ஏண்டி... சுகாதாரத்துறையையும் விட்டு வைக்கலையா?''''அக்கா... பணம் சுருட்டறதுக்கு, எந்த துறையா இருந்தா என்ன?'' என்று கூறி சிரித்த மித்ரா, ''இதாவது பரவாயில்லை. குண்டடம் யூனியனில், எலக்ஷனப்ப பிடிச்ச பணத்தை 'ஸ்வாஹா' செஞ்சுட்டாங்களாம்,''''அடடே... அது என்ன மேட்டர்?''''சடையம்பாளையம் வில்லேஜில், எலக்ஷனுக்கு முதல் நாள், ஒரு கேன்டிடேட் கிட்ட லட்சக்கணக்கில் பிடிச்சாங்களாம். இதனால, எலக்ஷன் கேன்சல் ஆகிடுமோன்னு பயந்த கேன்டிகேட், பணத்தை பத்தி கண்டுக்கலையாம். இதை சாதகமாக்கிய '.... படையினர்' பணத்தை கொண்டுட்டு போயிட்டாங்க,''''எப்படியோ இதை, மோப்பம் முடிச்ச போலீஸ் துருவித்துருவி விசாரணை செஞ்சும் ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலையாம்,''''அப்ப... அந்த அதிகாரிகளுக்கு 'அமோக'மான பொங்கல்னு சொல்லு'' என்ற சித்ரா, ''மித்து, ஸ்ரீநகர் கோழிக்கடையில, 'சரக்கு' விக்கிறாங்களாம், தெரியுமா?'' சந்தேகம் கேட்டாள்.''சிக்கனோடு... சரக்கா... ரொம்ப டெவலப்மென்ட்தான்,'''அந்த கடையில், சரக்கு, குட்கா... சர்வசாதாரணமா கிடைக்குதாம். இதுபோக, கந்து வட்டியும் துாள் கிளப்புதாம். இவ்ளோ நடந்தும், அனுப்பர்பாளையம் போலீசார் கண்டுக்கறதே இல்லையாம். யாராவது புகார் சொன்னா, 'அப்படியா'னு கேட்டு, சிரிச்சுட்டே, கேமராவுக்கு முன்னாடி நிக்கறாப்ல, 'போஸ்' குடுக்கிறாங்களாம்,''''அக்கா... நீங்க ஒரு கடைக்கே இப்படின்னு சொல்றீங்க. டிஸ்ட்ரிக்டில், 176 இடத்தில, சில்லிங், லாட்டரி, சேவல் சண்டை, சீட்டாட்டம்னு, சட்ட விரோத செயல்கள் சூப்பரா நடக்குது தெரியுங்களா?''''வர... வர, மித்து ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டேடி''''தேங்க்யூ. இந்த இடங்களில் வசூலாகும் பல லட்சம் ரூபாய் எங்கே போகுதுன்னு, 'டாலர் மில்லியன்' கேள்வியாம். ஏன்னா, உயரதிகாரி, பணம் விஷயத்தில நெருப்பு. ஆனா, அவங்களுக்கு கீழே இருக்கிறவங்க காட்ல, பண மழையாம்,''''அப்ப.. சுக்ர திசையில, 'சந்திர' புத்தி நடக்குதுனு சொல்லு,'' என சிரித்தாள் சித்ரா.பேசி கொண்டே இருவரும், கோபுர வாசல் வந்தனர்.''அக்கா.. இன்னும் 'டென் மினிட்ஸ்'தான், சாமி கும்பிட்றலாம்,''என்று சொன்ன மித்ராவிடம், ''அதுக்குள்ள ஒரு மேட்டர் சொல்லிடறேன்,'' என்றாள் சித்ரா.''ம்.... சொல்லுங்க!''''சவுத் ஆர்.டி.ஓ., ஆபீசில், ஒரு குட்டி ஆபீசர் தனி ராஜாங்கமே நடத்துறாராம். டிரைவிங் ஸ்கூல் காரங்க யார் வந்தாலும் ஒரு 'சலாம்' போட்டு, கச்சிதமா வேலையை முடிச்சு 'மேட்டர்' ஓட்டுறார். ஆர்.டி.ஓ., இருந்தாலும் கூட, 'அவரு மீட்டிங் போயிருக்கார், வெயிட் பண்ணுங்க'ன்னு சொல்லி உட்கார வச்சிடுவாராம்,''''ஏக்கா... இது பெரிய ஆபீசருக்கு தெரியாதா?''''தெரிஞ்சா வுட்டு வைப்பாரா?'' என்ற சித்ராவின் மொபைல் போன் 'வைபரேட் மோடில்' அதிர்ந்தது. டிஸ்பிளேயில், 'கார்த்திக்' என்ற பெயர் வரவே, அட்டெண்ட் செய்யாமல் அணைத்து வைத்து, கோவிலுக்குள் செல்ல, மித்ராவும் தொடர்ந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X