Terrorists attack Pakistan military base | திணறிய பாகிஸ்தான்: ஒமர் மரணத்தில் மர்மம் நீடிப்பு | Dinamalar

திணறிய பாகிஸ்தான்: ஒமர் மரணத்தில் மர்மம் நீடிப்பு

Updated : மே 23, 2011 | Added : மே 23, 2011
Terrorists attack Pakistan military base, திணறிய பாகிஸ்தான்: ஒமர் மரணத்தில் மர்மம் நீடிப்பு

இஸ்லாமாபாத்: தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் கடற்படை வளாகத்தில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இன்னும் துப்பாக்கிசண்டை நீடித்து வருகிறது. இதற்கிடையில் தலிபான் தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டு கொல்லப்பட்டதாகவும் ஆனால் அவர் கொல்லப்படவில்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளரின் மறுப்பும் இன்னும் இந்த சாவில் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


நேற்று பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் 20 பேர் கராச்சியில் உள்ள மெக்ரான் கடற்படை தளத்திற்குள் நுழைந்தனர் . கையில் துப்பாக்கி, கையெறி குண்டுகளுடன் வந்தனர். இவர்கள் தளத்தை தங்கள் கைவசம் கொண்டு வரமுயற்சித்தனர். பலரை பிணயைக்கைதிகளாக பிடித்தனர் . இதனையடுத்து பாக்., படையினர் சூழ்ந்து கொண்டு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். அமெரிக்க தயாரிப்பான 2 ஹெலிகாப்டர்கள் பயங்கராவதிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.


கடந்த 2 ம் தேதி ஒசாமா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் செயல் என தலிபான் இயக்த்தின் செய்தி தொடர்பாளர் ராய்க்ட்ர் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் இவ்வாறு கூறியுள்ளார். இந்த தாக்குதலில் பாக்.,கில் உள்ள அணு உலைக்கு எவ்வித ஆபத்துமில்லை என கூறியுள்ளனர். அல்குவைதா, தலிபான் இயக்கத்தினரிடம் சிக்கி பாகிஸ்தான் தவித்து வருவதாக உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.


இதற்கிடையில் தலிபான் அமைப்பு தலைவர் ஒமர் அப்துல்லா பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாக்., ஐ.எஸ்., படையினர் தெரிவித்துள்ளனர். ஆப்கன் அரசும் உறுதி செய்துள்ளது .ஆனால் தலிபான் அமைப்பினர் ஒமர் உயிரோடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் இதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X