கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

Updated : மே 23, 2011 | Added : மே 23, 2011 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறையில் சந்தித்து பேசினார். சிறைச்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக ‌கருணாநிதி சென்றார். திகார் சிறைச்சாலையின் விதிமுறைப்படி 5 மணிக்கு அனைத்து சந்திப்புகளும் முடிந்து விடும்.

புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறையில் சந்தித்து பேசினார். சிறைச்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக ‌கருணாநிதி சென்றார். திகார் சிறைச்சாலையின் விதிமுறைப்படி 5 மணிக்கு அனைத்து சந்திப்புகளும் முடிந்து விடும். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு மாலையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். கனிமொழியை சந்தித்த பின்னர் கருணாநிதி இன்று இரவே சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் சென்னை திரும்புவதற்காக விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று இரவு ஸ்டாலினும் டில்லி வர உள்ளதாக தெரிகிறது. டில்லிக்கு கருணாநிதியுடன் அழகிரியும் உடன் சென்றுள்ளார். ஏற்கனவே கனிமொழியின் கணவர் மற்றும் தாயார் ராஜாத்தி டில்லியில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vadivelu - chennai,இந்தியா
23-மே-201120:26:20 IST Report Abuse
vadivelu ஏம்மா ஆட்டை போட்டதிலே மீதி எங்கே வச்சிருக்கே , சொல்லிடும்மான்னு கேக்க போயிருப்பாரு .
Rate this:
Cancel
kasi - Coimbatore,இந்தியா
23-மே-201120:19:59 IST Report Abuse
kasi உலக அளவில் ராஜா ஊழலில் இரண்டாவது இடம். அதற்கு நன்றி சொல்ல சென்று இருகிறார் ஊழலின் பிரம்மா உயர் திரு. கருணாநிதி அவர்கள். இப்படிக்கு இந்திய குடிமகன்.
Rate this:
Cancel
Selva Kumar - Chennai,இந்தியா
23-மே-201119:41:09 IST Report Abuse
Selva Kumar தாத்தா அடுத்து யார உள்ள அனுப்ப போறீங்க ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X