திகாயத் மகன் தலைவராக தேர்வு

Added : மே 23, 2011 | |
Advertisement
முஜாப்பர்நகர்:பாரதிய கிசான் என்ற விவசாய சங்கத்தின் புதிய தலைவராக, நரேஷ் திகாயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வட மாநிலங்களில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவதற்காக, "பாரதிய கிசான் யூனியன்' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் தலைவராக, மகேந்திர சிங் திகாயத்(76) இருந்தார். இவர், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி, சிறை சென்றவர். புற்று நோய் காரணமாக,

முஜாப்பர்நகர்:பாரதிய கிசான் என்ற விவசாய சங்கத்தின் புதிய தலைவராக, நரேஷ் திகாயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வட மாநிலங்களில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவதற்காக, "பாரதிய கிசான் யூனியன்' என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் தலைவராக, மகேந்திர சிங் திகாயத்(76) இருந்தார். இவர், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி, சிறை சென்றவர். புற்று நோய் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், இவர் காலமானார்.இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் புதிய தலைவராக, மகேந்திர சிங் திகாயத்தின் மகன், நரேஷ் திகாயத், நேற்று தேர்வு செய்யப்பட்டார்.அவர் கூறுகையில், "சமீபகாலமாக, தொழிற்சாலை அமைப்பதற்காக, விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளின் இப்பிரச்னைக்கு தீர்வு காண, போராட்டம் நடத்துவதற்கு, பாரதிய கிசான் யூனியன், தயங்காது' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X