"ஆமாய்யா நாங்கதான் அடிச்சோம்" - ஹிந்து அமைப்பு பகிரங்கம்

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (198)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் மாணவர்கள் மீது நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரை பார்த்து சகித்து கொள்ள முடியாது என ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பு பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளது.டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் கடந்த ( 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ) இரவில் முகமூடி அணிந்து தடிகளுடன் வந்து தாக்குதல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் மாணவர்கள் மீது நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரை பார்த்து சகித்து கொள்ள முடியாது என ஹிந்து ரக்ஷா தளம் அமைப்பு பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளது.



latest tamil news



டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் கடந்த ( 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ) இரவில் முகமூடி அணிந்து தடிகளுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் உள்ளிட்ட பலர் காயமுற்றனர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டினர்.


latest tamil news



இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக டில்லி சிறப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து குற்றவாளிகைள தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்து ரக் ஷாதளம் அமைப்பு தலைவர் பிங்கி சவுத்ரி நிருபர்களிடம் பேசுகையில்: பல்கலை., மாணவர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை பார்த்து நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது. ஆமாம் பல்கலை.,க்குள் புகுந்து எங்கள் தொண்டர்கள் தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாங்களே இந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்கிறோம்.இவ்வாறு பிந்து கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (198)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜன-202001:31:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ஹிந்து ரக் ஷாதளம் அமைப்பு தலைவர் பிங்கி சவுத்ரி, "ஆமாம் பல்கலை.,க்குள் புகுந்து எங்கள் "தொண்டர்கள்" (வானர குண்டர்கள்) தான் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாங்களே இந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்கிறோம்" என்று கூறினார்.// இது தான் இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
12-ஜன-202000:36:22 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் இந்த கயவர்களுக்கு யார் அந்த அனுமதியை கொடுத்தது, பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயரின் காலை வருடி பிழைத்த கூட்டம், இப்ப இந்தியர்களையே தாக்குகிறது
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
08-ஜன-202001:09:40 IST Report Abuse
PANDA PANDI செய்யறது அயோக்கியத்தனம். இதில வக்காலத்து வேற. எங்க போய் சொல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X