மதத்தை அவமதித்தால் ரூ.1.95கோடி 'பைன்': அபுதாபி நீதித்துறை

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (70)
Advertisement
UAE, AbuDhabi, JudicialDepartment, Fine, Jail, அபுதாபி, நீதித்துறை, மதம், அவமதிப்பு, அபராதம்

இந்த செய்தியை கேட்க

அபுதாபி: எந்த மதத்தை அவமதித்தாலும் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1.95 கோடி அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவர் மற்றொருவரின் மதம், இனம், சாதி, நிறம் உள்ளிட்ட வேறுபாட்டை சுட்டிக்காட்டி அவமதிக்கும் செயல் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதிலும் சமூக வலைதளங்களில் அவமதிக்கும் வகையிலான பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில், எந்த மதத்தை அவமதித்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1.95 கோடி) அபராதமும் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.





இது குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அல் மஸ்ரூய் கூறுகையில், சாதி, மதம், நிறம் உள்ளிட்டவற்றை வேறுபடுத்தி அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாட்டினராக இருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமமாக நடத்தப்படுவர். அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மக்கள், சமூக வலைதளங்களில் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மீறினால் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா
08-ஜன-202015:13:01 IST Report Abuse
Natarajan Dhanasekar கிரேட், மற்ற நாடுகளும் இதை பின்பற்றவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
08-ஜன-202004:52:26 IST Report Abuse
chenar நல்ல படிச்சு பாருங்க மதம் மட்டுமல்ல சாதி இனம் எல்லாம் இருக்கு நான்தான் தலையில் பிறந்தேன் எனக்குதான் அர்ச்சகர் உரிமை என் மொழி தான் தேவ பாஷை என்றெல்லாம் சொல்ல முடியாது
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
07-ஜன-202023:47:18 IST Report Abuse
dandy இந்தியாவில் தண்டம் மாத்திரம் அல்ல இந்து மதத்தை கேவலமா பேசும் பிறவிகளுக்கு 25 வருடம் கடும் காவல் தண்டனை கொடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X