வருது..வருது...மைலாப்பூர் திருவிழா வருது.

Updated : ஜன 07, 2020 | Added : ஜன 07, 2020
Share
Advertisement



latest tamil news



கடந்த சில ஆண்டுகளாக பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்றுவரும் மைலாப்பூர் திருவிழா வருகின்ற 9 ந்தேதி துவங்கி 12 ந்தேதி வரை நடைபெறுகிறது.


latest tamil news


மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி நாட்டியம் நாடகம் இசை வாய்ப்பாட்டு கிராமீய நடனங்கள் பாராம்பரிய உணவுகள் மற்றும் உடைகள் கண்காட்சி என்று விழா நடக்கும் நாட்களில் உற்சாகம் கரைபுரளும்.


latest tamil news


விழாவின் பிரதான விஷயமான கோலப்போட்டி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டி காரணமாக தெரு முழுவதும் போடப்படும் கோலங்கள் அருமையாக இருக்கும்.பராம்பரிய விளையாட்டான தாயம்,பல்லாங்குழி,ஆடுபுலி ஆட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும்.
பழமையான மைலாப்பூர் என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியும்,பழமையான வீடுகள் உணவு கூடங்களை அடையாளம் காணும் ெஹரிடேஜ் நடையும் உண்டு.விழாவிற்கான ஏற்பாடுகள் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் உதவியுடன் நடந்துவருகிறது.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X