சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓமலுாரில் 4 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்

Added : ஜன 07, 2020
Advertisement

ஓமலுார் : ஓமலுாரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, 15.5 டன் சர்க்கரை, 4.5 டன் கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலுாரில் அதிகளவிலான கரும்பு ஆலைகள் செயல்படுகின்றன. அப்பகுதியில், ஒரு சில ஆலைகளில் கலப்பட வெல்லம் உற்பத்தி செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.நேற்று முன்தினம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், காமலாபுரத்தில், ஐந்து ஆலைகளில் ஆய்வு செய்தனர். இதில், மூன்று ஆலைகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பழனிசாமி, ரமேஷ், ரத்தினம், வேலு, பி.ஆர்., ஆகியோரின் கரும்பாலைகளில், விதிமீறல்கள் இருந்தது கண்டறிந்து, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.ஆலைகளில் இருந்து, 15 ஆயிரத்து, 625 கிலோ சர்க்கரை, வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த, 165 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம், 15 கிலோ சோடியம் பை கார்பனேட், 5 கிலோ ஹைட்ரோஸ், மற்றும் 4,686 கிலோ கலப்பட வெல்லம் ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X