சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி விவசாயி பலி

Added : ஜன 07, 2020
Advertisement

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, யானை தாக்கியதில், விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளிடமிருந்து, பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள், இரவு காவலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, தேன்கனிக்கோட்டை அடுத்த சாப்ரானப்பள்ளியைச் சேர்ந்த, விவசாயி சுரேஷ், 34, நேற்று முன்தினம் இரவு, விவசாய நிலத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நேற்று காலை, கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர், வனத்துறையை கண்டித்து, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X