பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் மனதை கவரும் கொழுக்குமலை

Added : ஜன 07, 2020
Advertisement

போடி : தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கொழுக்குமலையில் மலைமுகடுகளை தழுவிச்செல்லும் வெண்மேகக்கூட்டங்கள், பனிப்பொழிவை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

பயணிகளிடம் அடாவடி வசூலில் கேரள ஜீப் ஓட்டுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.போடி ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொழுக்குமலை மலைக்கிராமம் அமைந்துஉள்ளது.இங்கு அதிகாலையில் சூரிய உதயம், மலைமுகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்கள், பனிப்பொழிவை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இயற்கை அழகை பார்த்து ரசிப்பதோடு போட்டோ, அலைபேசியில் 'செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர்.

குரங்கணியிலிருந்து 14 கி.மீ., துாரம் செங்குத்தான மலைப்பாதையில் நடந்தால் கொழுக்குமலை சென்றடையலாம். 2 ஆண்டுகளுக்கு முன் - அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியானதையொட்டி, குரங்கணியிலிருந்து கொழுக்குமலைக்கு 'டிரக்கிங் 'செல்ல வனத்துறை தடை விதித்தது.இதனால் போடியிலிருந்து 55 கி.மீ., துாரமும், மூணாறிலிருந்து 35 கி.மீ., துாரம் உள்ள கொழுக்குமலைக்கு சூரியநெல்லி வரை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் செல்ல வேண்டும். அங்கிருந்து 13 கி.மீ., துாரமுள்ள கொழுக்குமலை வரை குண்டும், குழியுமாக உள்ள ரோட்டில் கேரள ஜீப்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதில் ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.தமிழக பகுதியில் அமைந்துள்ள கொழுக்குமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. பல லட்சம் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X