சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் நான்கு பேர் பலி

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020
Advertisement

தஞ்சாவூர்: கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை கலிமாநகரை சேர்ந்த இருஸ்மரக்காயர், 44, சீர்காழி, திருமுல்லைவாயிலை சேர்ந்த ஷேக்தாவுத், 44, உட்பட நான்கு பேர், 'மாருதி சுசுகி' காரில், கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அடுத்த, சுக்காம்பார் பகுதியில், சாலையோரத்தில் இருந்த பனை மரத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில், இருஸ்மரக்காயர், ஷேக்தாவுத் பலியாகினர். மற்ற இருவர், படுகாயங்களுடன், தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து, தோகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

● கர்நாடகா மாநிலம், பெங்களூரு சாமன்னா நகரை சேர்ந்தவர், தன்வீர்கான், 23. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். முதுகானப்பள்ளி அருகே, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த அரசு பஸ் மீது, இருசக்கரவாகனம் மோதியது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தேவர்குட்டப்பள்ளியைச் சேர்ந்தவர், முனுசாமி மனைவி எல்லம்மா, 72. இவர், சின்னாறு தேசிய நெடுஞ்சாலையோரம், சீத்தாப்பழம் விற்பனை செய்து வந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை, சின்னாறு பகுதியில் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ், எல்லம்மா மீது மோதியது. இதில் அவர், இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X