சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சும்மாவே இருக்கும் சுகாதார துறை அதிகாரி!

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 சும்மாவே இருக்கும் சுகாதார துறை அதிகாரி!

''நாயரே, குளிருக்கு இதமா இஞ்சி டீ போடும்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த அண்ணாச்சி, ''மாவட்ட பஞ்., தலைவர் பதவியை பிடிக்க, பலத்த போட்டி நடக்குல்லா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார்.

''எந்த மாவட்டத்துல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை மாவட்ட ஊராட்சியில, 23 கவுன்சிலர்கள் இருக்காங்க... இதுல, தி.மு.க., கூட்டணி, 14 இடங்களை பிடிச்சிட்டு வே... ''இந்த மாவட்ட பஞ்., தலைவர் பதவியை, மகளிர் பொது பிரிவுக்கு ஒதுக்கியிருக்காவ... ''இதனால, ஜெயிச்ச பெண் கவுன்சிலர்கள், தி.மு.க., மாவட்டச் செயலர் மூர்த்தியை, அவர் அலுவலகத்துல பார்த்து, கட்சிக்காக உழைச்ச விபரங்களை மனுவா குடுத்து, வாய்ப்பு கேட்டிருக்காவ வே...

''ஆனா, 'தலைவர் பதவி யாருக்குன்னு, தலைமை தான் முடிவு பண்ணும்'னு சொல்லிட்டாராம்... ''அதே நேரம், ஆளுங்கட்சி வலையில யாரும் விழுந்துடக் கூடாதுன்னு, தன் கட்சியின், 12 கவுன்சிலர்களையும், ஸ்டாலினை பார்க்க, சென்னைக்கு கூட்டிட்டு போயிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமா, இந்த தகவலையும் கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''திருப்பூர் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலர், துணை சபாநாயகர் ஜெயராமன்... ''இவர், தலைமையிடம் அனுமதி வாங்கி, உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதிகள்ல வர்ற ஒன்றியங்கள்ல, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை தேர்வு செஞ்சு நிறுத்தினாரு பா...

''இவருக்கும், கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனுக்கும், ஏழாம் பொருத்தம்... இதனால, முதல்வரை பார்த்த ராதா, 'என்னோட உடுமலை தொகுதிக்கு, நானே வேட்பாளர்களை போட்டுக்கிறேன்'னு, ஒப்புதல் வாங்கிட்டாரு பா... ''அதே நேரம், ஜெயராமன் நிறுத்துன ஆட்களுக்கு போட்டியா, சிலரை சுயேச்சையா களம் இறக்கி, அவங்களை ஆதரிச்சு பிரசாரம் கூட பண்ணியிருக்கார்...

''இந்த குளறுபடியால தான், 'நாலு சட்டசபை தொகுதிகள்லயும், தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றி, அ.தி.மு.க., கோட்டையில, ஓட்டை போட்டுடுச்சு'ன்னு, அ.தி.மு.க.,வினரே புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''இருக்கிற இடமே தெரியாம இருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கோவை மாவட்ட சுகாதார துறையில, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்க, சுகாதார பணிகள் சம்பந்தமா, எங்கயும் போய் ஆய்வு நடத்துறது இல்லை... அட, மாவட்டத்துல தான் இருக்காங்களா, இல்லையான்னே தெரிய மாட்டேங்குதுங்க... ''கலெக்டர் நடத்துற கூட்டங்கள்ல மட்டும் தான், இவர் தலையை பார்க்கலாம்... அதே நேரம், சில தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவா, இவர் நடந்துக்கிறதா நிறைய புகார்கள் வருதுங்க... ''சமீபத்துல ஒரு தனியார் மருத்துவமனை பத்தி புகார் வந்தப்ப, பெண் அதிகாரி கண்டுக்கவே இல்லை... அந்த மருத்துவமனைகிட்ட ஒரு விளக்கம் கூட கேட்கலைன்னா பாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சரி கிருஷ்ணா, நாளைக்கு பார்க்கலாம்...'' என, நண்பரிடம் விடைபெற்று அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R J U N - sennai ,யூ.எஸ்.ஏ
08-ஜன-202010:42:17 IST Report Abuse
A R J U N ஒருவேளை அமைச்சருக்கு வேண்டியவரா இருக்கலாம்.அதுதான் எங்கும் போகரது இல்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X