சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமுடியை விற்பனை செய்து குழந்தைகள் பசி போக்கிய பெண்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கந்துவட்டி,கொடுமை,தலைமுடி,விற்பனை,குழந்தைகள்,பசி

சேலம் : சேலம், வீமனுாரில் வறுமையின் பிடியில் சிக்கிய பெண், மொட்டை அடித்து, தலை முடியை விற்பனை செய்து, குழந்தைகளின் பசி போக்கி உள்ளார்.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 37. இவரது மனைவி பிரேமா, 31. இவர்களுக்கு மூன்று மகன்கள். வீமனுார் பகுதியில், 2015ல், செங்கல் சூளையில் பணியாற்றினர். நண்பர் ஒருவரது யோசனைப்படி, பல இடங்களில் கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து, நஷ்டப்பட்டனர். கடன் தொல்லையால், ஏழு மாதங்களுக்கு முன், செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்தார். உறவினர்கள் யாரும் உதவ முன் வரவில்லை.

பிரேமா, செங்கல் சூளை ஒன்றில், கூலி வேலைக்கு சென்று வருகிறார். கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள், பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், கடந்த வாரம், பிரேமாவும் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உள்ளார்.

குழந்தைகள் பசியால் துடித்ததால், தன் தலையை மொட்டை அடித்து, அந்த முடியை விற்பனை செய்து, குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இதையறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலா, 32, என்பவர், பிரேமாவை சந்தித்து, உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரை கந்து வட்டி கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சியில், மூன்று இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாலா கூறியதாவது: 'பேஸ்புக்'கில், பிரேமாவின் நிலை குறித்து பதிவிட்டோம். 1 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. அதை வைத்து, கடன்காரர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, அவர்களை அழைத்து பேச உள்ளோம். மூன்று குழந்தைகளின் படிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும், கந்து வட்டி கும்பல் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜன-202001:40:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும், கந்து வட்டி கும்பல் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.// கமிஷன் வட போச்சேங்குற காண்டு போலீசுக்கு.. அந்த மூன்று இளைஞர்களை பிடிச்சி மிரட்டுவாங்க இந்த பூலீஸ்..
Rate this:
Cancel
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
08-ஜன-202015:25:03 IST Report Abuse
Saravanan AE கந்து வட்டிக்காரர்களை முதலில் பிடியுங்கள். இதை செய்ய தவறும் போலீஸ் மற்றும் கலெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கை தெரியப்படுத்துங்கள். அப்பெண்ணுக்கு உதவுகிறவர்களுக்கு நன்றிகள் பல
Rate this:
Cancel
chails ahamad - doha,கத்தார்
08-ஜன-202015:11:37 IST Report Abuse
chails ahamad மனதை கனக்கின்றது இந்த தாயின் வறுமைகள் நீங்கிட , பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட உதவி செய்யும் உள்ளங்கள் ஏராளமாய் உள்ளதால் , தயவு செய்து இந்த குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் , வங்கியில் கணக்கு துவங்கி தினமலர் வாயிலாக வெளியிட செய்தால் ஓரளவு பயனாக இருந்திடும் . ஏதோ என்னால் இயன்றதையும் அனுப்பி வைக்க வசதியாக இருந்திடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X