பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின், 'ஆம்பர் கிரிஸ்'

Added : ஜன 07, 2020
Advertisement

கடலுார் : தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் எச்சமான, 'ஆம்பர் கிரிஸ்' மீட்கப்பட்டு, வனத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

கடலுார், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 36; மீனவர். இவர், நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள கடற்கரையில் நடந்து சென்றார்.அப்போது, வெள்ளை நிறத்தில் கரையொதுங்கிய, வித்தியாசமான பொருளை மீட்டு, கடலுார் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தார்.இது குறித்து, மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட பொருளை, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் பார்வையிட்டார்.

அது, திமிங்கலத்தின் எச்சமான, 'ஆம்பர் கிரிஸ்' என, தெரிய வந்தது. அதை, கடலுார் துறைமுக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:திமிங்கலம் பெரும்பாலும், கடவா வகை மீன்களை அதிகளவில் உண்ணும். செரிமானம் ஆகாத உணவுப்பொருள், ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கழித்து, 'ஆம்பர் கிரிஸ்' எனப்படும், எச்சமாக வெளியே வரும். வாசனை திரவியம் தயாரிக்கப்படும், மூலப் பொருள்களில் இதுவும் ஒன்றாகும்.

கடலுாரில் கரை ஒதுங்கிய ஆம்பர் கிரிஸ், 5.88 கிலோ உடையது. இது தரமானதாக இருந்தால், 1 கிலோ, 65 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஆனால் இதை, இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. வனத்துறையில் ஒப்படைக்கப்பட்டு, தீயிட்டு எரிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X