சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வி கேர்' குழுமத்தில் வணிக வரி சோதனை

Added : ஜன 07, 2020
Advertisement

ஜி.எஸ்.டி., முறைகேடுகளில் ஈடுபட்டதாக, தமிழகம் முழுவதும் உள்ள, 'வி கேர் கிளினிக்' குழுமத்தின், 33 கிளைகளில், வணிக வரி அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.

ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017 ஜூலை, 1 முதல், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இந்த சட்டப்படி, மாதம்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் முறையாக கணக்கு தாக்கல் செய்யாமல், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில், போலி பில் தயாரிப்பது தொடர்பாக, இரணடு மாதங்களுக்கு முன், 35 இடங்களில், வணிக வரி துறையினர் சோதனை நடத்தினர்.

தற்போது, 'பிரபாஸ் வி கேர் ஹெல்த் கிளினிக்' குழுமத்தில், வணிக வரித் துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:பிரபாஸ் வி கேர் ஹெல்த் கிளினிக் பற்றி, தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. ஜி.எஸ்.டி., பதிவு ரத்தான பிறகும், பல்வேறு பரிவர்த்தனைகளை, அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.மேலும், நிறுவனங்களின் பெயரை பதிவு செய்யாமலும், பல்வேறு புதிய மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலுார் ஆகிய நகரங்களில், வி கேர் குழுமத்திற்கு சொந்த மான, 33 கிளைகளில், வணிக வரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.இந்த சோதனையில், 100 வணிக வரி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்கள், சோதனை நீடிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X