கோர்ட் செய்தி

தமிழ்நாடு

துணைவேந்தர் நியமனம் ரத்து நீதிமன்றம் இடைக்கால தடை

Added : ஜன 07, 2020
Advertisement

மதுரை : தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாலசுப்ரமணியன் நியமனத்தை ரத்து செய்த, தனி நீதிபதியின் உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இடைக்கால தடை விதித்தது.

தஞ்சாவூர் பேராசிரியர் ரவீந்திரன், ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசு, தேடுதல் குழுவை, 2018 ஜூலை, 2ல் அமைத்தது. குழுவில், இப்பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் மணிவேல் இடம் பெற்றனர்.அரசாணைஅதே பல்கலையுடன் தொடர்புடைய இவர்கள், குழுவில் இடம் பெற்றது, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளுக்கு முரணானது. குழுவில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இடம் பெறவில்லை.துணைவேந்தர் பதவிக்கு நான் உட்பட பலர் விண்ணப்பித்தோம்.

ஆந்திரா திராவிட பல்கலையில் பணிபுரிந்த பாலசுப்ரமணியனை, தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தராக நியமித்து, 2018 அக்., 5ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அவர், அடிப்படை தகுதியான, சர்வதேச ஆய்வு கருத்தரங்கு எதுவும் நடத்தவில்லை. யு.ஜி.சி., விதிகள்படி, துணைவேந்தருக்குரிய போதிய தகுதிகள் பெற்றிருக்கவில்லை. நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளது. பாலசுப்ரமணியனை துணைவேந்தராக நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

விசாரித்த தனி நீதிபதி, 'துணைவேந்தராக பாலசுப்ரமணியனை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, டிச., 20ல் உத்தரவிட்டார். மேல்முறையீடுஇதை எதிர்த்து, பாலசுப்ரமணியன் மற்றும் பல்கலை தரப்பில், 'தேடுதல் குழு அமைத்தபோது கருணாகரன் மற்றும் மணிவேல், பல்கலையில் எவ்வித பதவியிலும் இல்லை. இதன் அடிப்படையில், துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்தது, விதிகள் படி ஏற்புடையதல்ல.'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, ஜன., 10க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X