பொது செய்தி

தமிழ்நாடு

பிரபல ஓவியர் அக்பர் பதம்ஸி காலமானார்

Added : ஜன 07, 2020
Advertisement

சென்னை : கோவை ஈஷா ஆசிரமத்தில் வசித்து வந்த, பிரபல ஓவியர் அக்பர் பதம்ஸி காலமானார்.

இந்தியாவின் பிரபலஓவியர்களில் ஒருவர், அக்பர் பதம்ஸி, 91. இவர் மும்பையில், 1928ல் பிறந்தார். நவீன இந்திய ஓவியக் கலையில் சிறந்து விளங்கிய இவர், மத்திய அரசின், 'பத்மபூஷன்' விருது பெற்றவர்.கடந்த, 15 ஆண்டுகளாக, ஈஷா யோக மையத்துடன் தொடர்பில் இருந்தவர், தன் இறுதி நாட்களை, அங்கு கழிக்க விரும்பி, சில மாதங்களுக்கு முன் கோவை சென்றார்.அங்கு வசித்து வந்தவர், உடல் நலக் குறைவால், நேற்று முன்தினம் மாலை காலமானார்.

அவரின் இறுதிச் சடங்குகள், ஈஷா யோக மையத்தில் நடந்தன. இது குறித்து, சத்குரு கூறியதாவது:அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர். அவர் வாழ்வின் கடைசிப் பகுதியை, எங்களுடன், ஈஷா யோக மையத்தில் கழித்தது, எங்கள் அதிர்ஷ்டம். அவரின் வர்ணஜாலத்தை, வரும் தலைமுறையினர் கண்டு ரசித்து, ஊக்கம் பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X