ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி சடங்கு

Added : ஜன 07, 2020

தர்மபுரி : பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்ற காளை இறந்ததால், அதற்கு சடங்குகள் செய்து, கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.

தர்மபுரி அடுத்த, சவுக்குதோப்பைச் சேர்ந்தவர் மாது, 46; விவசாயியான இவர், கருப்பன் என்ற, ஜல்லிக்கட்டு காளையை, 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தார்.இது, தர்மபுரி, ஓசூர், திருப்பத்துார் மற்றும் வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும், எருது விடும் விழாவில் பங்கேற்று, பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்ட காளை, நேற்று காலை, 8:30 மணிக்கு இறந்தது.

இதையறிந்த கிராம மக்கள், மாது வீட்டின் முன் குவிந்தனர். மனிதர்களை அடக்கம் செய்யும்போது செய்யப்படும் அனைத்து சடங்குகளையும், காளைக்கு செய்தனர்.பின், மாதுவின் விவசாய நிலத்தில், கருப்பன் காளையை அடக்கம் செய்தனர். பொங்கல் நெருங்கும் நேரத்தில், ஜல்லிக்கட்டு காளை இறந்ததால், கிராம மக்கள் வேதனை அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X