சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 'டவுட்' தனபாலு

பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பேச, தே.மு.தி.க.,வினருக்கு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேம லதா தடை விதித்துள்ளார்.

'டவுட்' தனபாலு: 'இன்னும் ஓராண்டில், தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இப்போதுள்ள நிலையில், ஆளும் கட்சியுடன் கூட்டு வைத்திருந்தால் தான், பல விதங்களில் நல்லது' என, நீங்கள், 'கணக்கு' போட்டு வைத்துள்ளீர்கள். அந்த ரகசிய கணக்கை, கட்சியினர் அறியாததால் தான், கூட்டணிக்கு எதிராக பேசி விட்டனர் என்பது, உங்களின் அவசர கண்டிப்பு மூலம், 'டவுட்' இல்லாமலே புரிகிறது.

***

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்: ஸ்டாலின், ஒரு நிமிடம் பொறுங்கள். சட்ட சபையில் உரையாற்ற நான் வந்துள்ளேன். நீங்கள் சிறந்த பேச்சாளர். இரண்டு ஆண்டுகளாக உங்களை கவனித்து வந்துள்ளேன். எனவே, என் பேச்சை இடைமறிக்காமல், விவாதத்தின் போது அதிக நேரம் பேசுங்கள்.

'டவுட்' தனபாலு: உங்கள் பேச்சை தடை செய்த ஸ்டாலினை, 'பேச்சாளர்' என நீங்கள் குறிப்பிட்டது, 'டவுட்'டே இல்லாமல் கிண்டல் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தகவல்களை தவறாக சொல்வதும், உண்மையை திரித்து பேசுவதும், போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்து ஸ்டாலின் பேசுவதை தானே, இப்படி மறைமுகமாக குறிப்பிட்டீர்கள்?

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக கவர்னர், சட்டசபையில் பேசியுள்ளார். அதுபோல, 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்ற உறுதியையும் அவர் வழங்கியுள்ளார். இது, வரவேற்கத்தக்கது.

'டவுட்' தனபாலு: கவர்னர் உரையில் இடம்பெற்ற அம்சங்களுக்கு, எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதே நேரம், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், அதே அம்சங்களை சாதகமாக பார்க்கின்றன. எப்படியோ, உங்கள் அறிக்கையை பார்த்த பிறகாவது, அ.தி.மு.க.,வினர், 'நமக்கும் ஆதரவாக சிலர் இருக்கின்றனர்...' என, 'டவுட்'டே இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விடுவர்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
08-ஜன-202011:09:28 IST Report Abuse
R. Vidya Sagar கவர்னர் மாளிகையில் வந்து பாருங்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஜன-202006:06:16 IST Report Abuse
D.Ambujavalli தலை வேண்டுமானால் கூட்டணி டீலில் காசு பார்க்கலாம் அதற்காக தொண்டனுக்கென்ன, அவனுடைய ஆற்றாமையை செல்லத்தான் செய்வான்
Rate this:
Share this comment
Cancel
08-ஜன-202003:01:57 IST Report Abuse
மோகன் சுடலைஐ கவர்னர் அருமையான முறையில் தலையில் குட்டுவைத்ததை டவுட் தனபால் விளக்கியது மிகவும் தமாஷாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X