சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் குருக்கள் 'சஸ்பெண்ட்'

Added : ஜன 07, 2020
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கருவறையில் உள்ள சுவாமி சிலை, 'வாட்ஸ் ஆப்'பில் பரவியதை அடுத்து, குருக்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் கருவறையில் உள்ள ராமநாத சுவாமி சிலை, 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது. கோவில் குருக்கள் மீது நடவடிக்கை கோரி, ஹிந்து மக்கள் கட்சி, இந்திய கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.நேற்று கோவிலில், இணை ஆணையர் கல்யாணி விசாரணை நடத்தினார். அதில், குருக்கள் விஜயகுமார் போகில், அலைபேசி மூலம் படம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, விஜயகுமார் போகிலை, 'சஸ்பெண்ட்' செய்து கல்யாணி உத்தரவிட்டார்.

இந்நிலையில், 'கோவில் குருக்கள், ஊழியர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X