அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உட்டாலக்கடி'கள்

Added : ஜன 07, 2020
Advertisement

பணத்தை திரும்ப தா...!மிரட்டும் வி.ஐ.பி.,------திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பரமேஸ்வரி. இவரது கணவர் முருகன், மண்ணச்சநல்லுார் ஒன்றியத்தில், நான்காவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இந்தப் பதவிக்கு ஏலம் நடந்ததாகவும், முருகன், 14 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் எடுத்ததாகவும், தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, விசாரணையும் நடத்தப்பட்டது.தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது.

தோல்வி அடைந்ததால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அவரது கணவரும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதாக, சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருகிறது.அதில் பேசுபவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக, கொடுத்த பணத்தை, சிலர் மட்டும் அப்படியே வைத்துக் கொண்டதால் தான், தோல்வியடைந்து விட்டோம். அதனால், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, முக்கிய பிரமுகர் தரக்குறைவாக திட்டுவதாக, தெரிவிக்கிறார். இந்த வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவுகிறது.

-3 பேருடன் வந்தால்தலைவர் பதவியாம்!---------திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 19 இடங்களில், அ.தி.மு.க., - 7, பா.ம.க., - 5, தி.மு.க., - 3, சுயேச்சைகள் - 4 பேர் வெற்றி பெற்றனர்.அ.தி.மு.க., கூட்டணி, 12 கவுன்சிலர்களை பெற்றிருப்பதால், ஒன்றியக்குழு தலைவர் பதவியை, அ.தி.மு.க.,வும், துணைத் தலைவர் பதவியை, பா.ம.க.,வும் எடுத்துக் கொண்டால், எந்தவொரு பிரச்னையும் இல்லை.ஆனால், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியச் செயலர் அர்ஜுனன் மனைவி அற்புதம், கிழக்கு ஒன்றிய செயலர் லோகேஷ்வரன் தாய் ஜெயமணி ஆகிய இருவருமே, ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அடம் பிடிக்கின்றனர்.இதனால், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், விநோத யோசனை தெரிவித்துள்ளனர். இதன்படி, இரண்டு நாளில் மூன்று சுயேச்சைகளுடன் வருபவருக்கே ஒன்றியக்குழு தலைவர் பதவி, மற்றவருக்கு துணைத் தலைவர் பதவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், நான்கு சுயேச்சைகளுக்கும், இரு தரப்பும் வலை விரித்திருக்கிறது.

ஆனால், மூன்று பேர், தி.மு.க., பாதுகாப்பிலும், மற்றொருவர், பா.ம.க.,வுக்கு ஆதரவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வந்தவாசி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X